Thursday, June 30, 2011

இதயச் சிறை

சிறை இருக்க
ஆசைப்படும்
ஒரே ஜீவன்

அவளின் சுவாசக்
காற்று

ஏனெனில்
அடைக்கும் சிறை
அவளது இதயமல்லவா?

நானும் காற்றை போல !

சுகமாய் கரைந்தேன்

புழுதிக் காற்றை
எதிர்த்து நின்ற
மணல குவியல் போலே
உந்தன்
கண் பார்வை எதிர் நோக்கி
பார்வை மெல்ல கடக்கையிலே
சுகமாய் கரைந்து போனேன் 

தேய்வு!


பெண்மையின் 
விரல் தூரிகை தீட்டிய 
திலகமும் ஓர்
தொன்மையான ஓவியம் தான் 

அதனால் தான் 
பெண் நெற்றி சித்தன்ன வாசல்களில் 
அவைகள் தேய்ந்து கொண்டே வருகிறது 

பெண் நெற்றி வானில் 
நாகரிக அமாவாசை 
திலக நிலா தொலைந்து போனது 

சூட்சுமம்

உன் கூந்தல்
ஏறா மலர்கள்
வாடி உதிர்வதிலும்
ஒரு சூட்சுமம் உள்ளதடி

உன் பாதத்தில்
மிதி படலாமல்லவா!

நசிவு

பேருந்தின் நெரிசலே!

உனக்கோர் நன்றி.

உன் மணிநேர
பயணத்தில்
சாதி மத பேதங்கள்
நசிந்து போகின்றன 

Monday, June 27, 2011

மெய்யே!

ரோஜாவின் பாதம்
முள்ளென்று
கேள்விப்பட்டேன்

அடியே ரோஜாவே!
உந்தன் பாத மென்மை
மெய் ரோஜாவயையே
தோற்கடிப்பது எப்படி?

பிழையா? அழகின் இலையா?

ஸ்வர்ண சிலையின்
பிழையும் அழகே!

உந்தன் பருக்கள்
கண்டு நான் உணர்ந்தேன் 

Saturday, June 25, 2011

தூக்கான தூண்டில் - ராமேஸ்வரக் கடலுக்குள் கரைந்த ஓசை


செய்த பாவம் 
துரத்தி வந்து 
பலனை தரும் அல்லவா?

ஒருச்சான் வயிறு 
கண்டு பிடித்த பசிக்காய் 
வலை எடுத்து வீசி 
தினம் சிறு மீனின் உயிரை 
ருசிபார்த்த பாவியல்லவா நான் 

மீனுக்கும் எனக்கும் 
ஒரே வித்யாசம் 
அது மாண்டதோ
வீசிய வலையால் 
நான் சாகப் போவதோ 
பேசும் தோட்டாவால் 

என் வாழ்க்கை 
என்னும் கபடி தினம் அரங்கேருது 
கடல் தாயே உன் மடி மீது 
என் எதிரி சகோதரன் 
எல்லைக் கோட்டை கடந்தும் 
வெற்றி மட்டுமே பெறுகிறான் 
நான் இன்னும் களமே 
இறங்கவில்லை ... தோல்வி தேடி வருவதேனோ?

ஆட்சிகள் சுழற்றிவிட்ட 
காசாய் தினம் மாற...
வரிப் பணத்தை 
அடுக்கி உச்சம் எட்டுவதோ 
அரசியலே உங்கள் வாழ்க்கை மட்டும் தான் 

நாங்கள் 
கொச்சை மீன் வாசம் மணக்க 
பழஞ் சோறும் வீசியக் கருவாடும்
தினம் சுவைத்து உடம்பை வளர்ப்பது
என் குழந்தை புசிக்கவே அன்றி 
அந்த தோட்டாவின் பசிப் போக்க அல்ல 

தெரியும் இதற்கும் 
உங்களிடம் நான்
பெறப்போவது உங்கள் மௌனம் என்று 
இந்த மௌனதிலலேயே
எங்கள் மரணச் சான்றிதழ்களில் 
கையெழுத்திடுங்கள் 



ஆசிரியப் பா

ஆசான் வசையால்
கொஞ்சம் கசங்கிய
மாணவத் துகிலே
மாசு களை!
மெய்யுணர் !

தலையோடு சுத்தியின்
முத்தம்கொள்ளாமல்
ஆணிகள் உயரத்தில்
இடம் கொள்ளாது

மண்ணின் சுமை மேலே
போர்த்திக்கொள்ளாமல்
விதைகள் விருட்சமாகாது

தினம் நீளும்
உன் ஆசான்
வசைகள் எல்லாமே
பின்னால் காதுக்குள் நிறையும்
புகளின் முன் நோட்டம்

இதை மனதில் கொள்
என்றும் எதுவும் கசப்பாய் தெரியாது

Its dedicated to Mr.Shenbagaraj AP/IT Dept. MSEC 2011 and My sweetest friend ever. Thank you sir! 

Friday, June 24, 2011

அநியாயம்

உதடுக்குள் வார்த்தையை
சிறை வைத்து

என் உயிரை தூக்கி
தூக்கிலிட்டு

இப்படி என் கண்கள்
செய்த தவறில்
மனம் விழ்ந்து மயங்கியக்
குற்றத்திற்கு
தண்டனை என்ன
மற்றவர்க்கோ?

Thursday, June 23, 2011

விசித்திர மழை

முகில் கர்ப்பமாகாமல்
மழையாக

ஈரம் தீண்டாமல்
எனை நனைத்துவிட

மகிழ்ச்சிக் குளிரில் நடுங்க விட

நட்பென்னும் மழையே
உன்னால் மட்டுமே
முடியும்


கடலலைக்கு ஓர் சவால்

கரை ஏற முயன்று
மீண்டும் மீண்டும் தொற்றும்
தன் நம்பிக்கை குன்றா காதலையே!

கரையிடம் தோற்பது எளிது
கொஞ்சம் காதலிடம் தோற்றுப் பார்
உன் தன நம்பிக்கையும் குறையும் 

Sunday, June 19, 2011

சூரியக்கிரகணம்

சூரியனில் 
இன்று மின்வெட்டு 
ஆனால் 
இதற்குக் காரணம் 
ஆட்சியல்ல
அறிவியல் சுழற்சி 

பழமொழியை 
பொய்யாக்கி 
சந்திரன் சொல்கிறான் 
ஆயிரம் கைகள் தேவை இல்லை 
ஆதவா! உன்னை மறைக்க 
நானொருவன் போதுமடா 




[சந்திரக் கிரகண வாசகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இனங்க இதோ!!]


தந்தையர் தினம் - Even my life can't repay his Dept :) I love u Dad!


எழுத்தால் இன்று
நானொரு கவிஞன் 
அறிவால் இன்று 
நானொரு பொறியாளன் 
இருந்ததும்
என் இயக்கம் என் அறிவு என் உயர்வு எல்லாம்
எழுத படிக்கத் தெரியா என் தந்தையால்
எவன் அறிவான் இவ்வுண்மைகள்

புத்தக முட்டை நான் சுமக்க
மூட்டை சுமந்தவன் நீ !

பசி என்பதன்
உண்மை அர்த்தம்
புத்தகத்தில் படித்தே
நான் அறிந்தேன்
நான் படிப்பதற்காய்
அதில் நீ தினம்
அமிழ்ந்தாய்!

பாதம் நோகாமல்
நடை நான் பழக
நெஞ்சோடு பாதை தந்தாய்
தத்தித் தடுமாறிய
எனக்கு உன் விரலால்
ஒரு பயணம் தந்தாய்
உன் அனுபவத்தால்
நல் வேதம் சொன்னாய்

விரல்கள் நோகாமல் எழுத்து
முட்டி உடையாமல் மிதிவண்டி
மூர்ச்சை ஆகாமல் எதிர்நீச்சல்
இப்படி எனை மட்டுமே 
சிந்தித்த காதல் 

இப்படித் தினம் நான்
வான் ஏற உன்
முதுகொடித்து ஏணிஆகி

என்னை மீளா
கடனில் மூழ்க்கிவிட்டாய்

என் தகப்பனே !
மீண்டும் ஓர் பிறப்பெடுக்கணும்
அதில் நான் உன்னை 
பெற்றேடுக்கணும்



Dedicated to my dad

Wishes to my sweet father...happy father's day

Saturday, June 18, 2011

ஜோடி

உலகம் துவங்கிய 
நுனி நாள் தொட்டு 

மனதோடு முனைப்பேற்று 
செல்லமாய் சண்டை
பல போட்டும் 

பிரிவை அறியா 
ஒரே காதல் ஜோடி

[முனைவு - Ego]

Thursday, June 16, 2011

சந்திரக்கிரகணம்

சூரியனிடம்
நிலா பட்டதல்லவா
ஒளிக் கடன்

அதான் அவனை
பார்த்து ஓடி
ஒழிகிறது
பூமியின் பின்னால் 

Wednesday, June 15, 2011

FarmVille


கோனமானி அளக்க
கவராயம் பூட்டி 
கட்டிடங்கள் எழுப்பும் 
பொறியாளன் நான்

வெயில் பிளக்கும் கட்டுக்குள்ளே 
ஏர் பூட்டி தொழி கலந்து 
களை எடுத்து விவசாயம் பார்ப்பேனா?
என்று சொல்லித்திரிந்தவன் 

பருத்தி நூலின் 
முதுகொடித்து 
சிங்கர சட்டை நூர்த்துத் தந்தால்
ஒய்யாரமாய் சொல்வேன் 
நான் White color jobbed பட்டனக்காரன் என்று 

அனால் பாத்தி வெட்டி 
பயிரிட்டு 
நாசியை தூசியாக்கும் 
பருத்திக்காட்டுக்குள்ளே 
நான் இறங்கேன் 
என்று சொல்லித் திரிந்தவன் 

சுவையாய் சோறு வேண்டும் 
சேறு என் கால்கள் நனைக்காமல் 
வயிறு நிறைந்திடவேண்டும் 
அனால் என் வயல்வெளிகள் 
வீடு மனைகள் ஆகும் 
ஏனெனில் நான் 
பட்டனக்காரன் 

என்று சொல்லித் திறந்தவன்
facebookல் sign-in செய்து 
முதலில் பார்வை இடுகிறான் 
தனது farmvile பகுதியை 

Tuesday, June 7, 2011

251 - 250 ஐ பற்றி

காதலை
கற்பனையை
கோபத்தை

இப்படி சொல்ல நினைத்தது

இயலாமை
இயங்காமை
இம்சைகள்

இப்படி சொல்லப்படாமல் புதைந்தது
என்று சிறுகத் தேடி

தமிழகர பட்டறையில்
கற்பனை சுத்தியை
ஓங்கி பேச விட்டு
மினு மினுக்க
தமிழன்னைக்கு
இந்தக் கவிக் கொல்லன் செய்த
பொன்னகை 250 சவரன்

வாசிப்பாளர்களுக்கு நன்றி 
நீளும் நாட்களிலும் இதே ஆதரவை எதிர்நோக்கி
உங்கள் அன்புத் தோழன்

விரும்பி

கண்ணீர் கடலுக்குள்
விரும்பி மூழ்கினேன்

மீட்க
காதல் படகில் நீ
வருவாய்
என்னும்
நம்பிக்கையில் 

Sunday, June 5, 2011

(அவசர) உலக இணைப்பு


கணினி உலகம் 

மனோதொடு என்ன?
twitter கேட்கிறது 

உன் உண்மைத் 
தோழன் எவன் 
facebook app கணிக்கிறது 

மகன் படிக்கும் 
வகுப்பு என்ன?
மைந்தனின் facebook profileல் 
தேடித் பார்க்கிறார் 
தந்தை 

காதலியிடம் 
சொல்ல வேண்டிய 
கனவுகள் கவிகளாய்
Blog பேழையில் 
குவிந்துப்போகிறது 

தாயின் பாசம் 
Pocketஆகி வருகிறது 
3G வாயிலாய்

கல்லூரி நினைவுகளை
கருக்குள் பூட்டிச்
சுமக்கிறது Picasa

நட்பின் திருமணம் 
stream ஆகிறது 
Youtube ல்

இது அவசர உலகமன்றோ?


Thursday, June 2, 2011

கற்றுகொண்டத் தோல்வி

களவும் கற்று மாற
இந்த வள்ளுவம்
பொய்த்துவிடக் கூடாதென

காதலை கற்றுக்
கொடுத்த அவளே
தோல்வியையும்
கற்றுக் கொடுத்துவிட்டால்

மறதியை பறித்து சென்றுவிட்டால்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்