செய்த பாவம்
துரத்தி வந்து
பலனை தரும் அல்லவா?
ஒருச்சான் வயிறு
கண்டு பிடித்த பசிக்காய்
வலை எடுத்து வீசி
தினம் சிறு மீனின் உயிரை
ருசிபார்த்த பாவியல்லவா நான்
மீனுக்கும் எனக்கும்
ஒரே வித்யாசம்
அது மாண்டதோ
வீசிய வலையால்
நான் சாகப் போவதோ
பேசும் தோட்டாவால்
என் வாழ்க்கை
என்னும் கபடி தினம் அரங்கேருது
கடல் தாயே உன் மடி மீது
என் எதிரி சகோதரன்
எல்லைக் கோட்டை கடந்தும்
வெற்றி மட்டுமே பெறுகிறான்
நான் இன்னும் களமே
இறங்கவில்லை ... தோல்வி தேடி வருவதேனோ?
ஆட்சிகள் சுழற்றிவிட்ட
காசாய் தினம் மாற...
வரிப் பணத்தை
அடுக்கி உச்சம் எட்டுவதோ
அரசியலே உங்கள் வாழ்க்கை மட்டும் தான்
நாங்கள்
கொச்சை மீன் வாசம் மணக்க
பழஞ் சோறும் வீசியக் கருவாடும்
தினம் சுவைத்து உடம்பை வளர்ப்பது
என் குழந்தை புசிக்கவே அன்றி
அந்த தோட்டாவின் பசிப் போக்க அல்ல
தெரியும் இதற்கும்
உங்களிடம் நான்
பெறப்போவது உங்கள் மௌனம் என்று
இந்த மௌனதிலலேயே
எங்கள் மரணச் சான்றிதழ்களில்
கையெழுத்திடுங்கள்
உணர்வுகள்,வலிகள் நிறைந்த வரிகள்..அருமை
ReplyDeleteராமேசுவர மீனவர்களின் வாழ்க்கைப் பதிவு..
ReplyDeletehttp://vijayandurai.blogspot.com/2011/06/blog-post.html