எழுத்தால் இன்று
நானொரு கவிஞன்
அறிவால் இன்று
நானொரு பொறியாளன்
இருந்ததும்
என் இயக்கம் என் அறிவு என் உயர்வு எல்லாம்
எழுத படிக்கத் தெரியா என் தந்தையால்
எவன் அறிவான் இவ்வுண்மைகள்
புத்தக முட்டை நான் சுமக்க
மூட்டை சுமந்தவன் நீ !
பசி என்பதன்
உண்மை அர்த்தம்
புத்தகத்தில் படித்தே
நான் அறிந்தேன்
நான் படிப்பதற்காய்
அதில் நீ தினம்
அமிழ்ந்தாய்!
பாதம் நோகாமல்
நடை நான் பழக
நெஞ்சோடு பாதை தந்தாய்
தத்தித் தடுமாறிய
எனக்கு உன் விரலால்
ஒரு பயணம் தந்தாய்
உன் அனுபவத்தால்
நல் வேதம் சொன்னாய்
விரல்கள் நோகாமல் எழுத்து
முட்டி உடையாமல் மிதிவண்டி
மூர்ச்சை ஆகாமல் எதிர்நீச்சல்
இப்படி எனை மட்டுமே
சிந்தித்த காதல்
இப்படித் தினம் நான்
வான் ஏற உன்
முதுகொடித்து ஏணிஆகி
என்னை மீளா
கடனில் மூழ்க்கிவிட்டாய்
என் தகப்பனே !
மீண்டும் ஓர் பிறப்பெடுக்கணும்
அதில் நான் உன்னை
Dedicated to my dad
Wishes to my sweet father...happy father's day
அந்த உயர்ந்த தகப்பனுக்கு எனது வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!
ReplyDeleteதந்தையர் தின வாழ்த்துகள் சகோதரா
ReplyDelete