இவர்கள்
நாதஸ்வரத்தால் நலம் விசாரித்தார்கள்
கிடாரால் காதல் சொன்னார்கள்
மௌத் ஆர்கனால் முத்தமிட்டார்கள்
குழலால் காதலை அழைத்தார்கள்
வயலினால் அழுதார்கள்
வீணையால் திருமண சந்தையில் விலை போனார்கள்
ஹார்மோனியத்தால் பிச்சை எடுத்தார்கள்
உருமியால் தெய்வத்தை அழைத்தார்கள்
பியானோவால் முன்னால் காதலை பாடினார்கள்
மகுடியால் பாம்பு பிடித்தார்கள்
இப்படி இசையை மேடையேற்றிய
திரையுலகில் இன்று எல்லாம் தூசியேரி
மூலையில் விட்டு கணினி வாசிக்க
கண்டதெல்லாம் இசையென்கிறான்
புரட்சி என்று சொல்லிவிட்டு
பார்த்து செய்த வீணையை
புழுதியில் எறிகிறார்கள்
இசை இன்னும் அநாதை ஆகவில்லை
எங்கள் நம்பிக்கைக்கும் உயிர் போகவில்லை ...
நாதஸ்வரத்தால் நலம் விசாரித்தார்கள்
கிடாரால் காதல் சொன்னார்கள்
மௌத் ஆர்கனால் முத்தமிட்டார்கள்
குழலால் காதலை அழைத்தார்கள்
வயலினால் அழுதார்கள்
வீணையால் திருமண சந்தையில் விலை போனார்கள்
ஹார்மோனியத்தால் பிச்சை எடுத்தார்கள்
உருமியால் தெய்வத்தை அழைத்தார்கள்
பியானோவால் முன்னால் காதலை பாடினார்கள்
மகுடியால் பாம்பு பிடித்தார்கள்
இப்படி இசையை மேடையேற்றிய
திரையுலகில் இன்று எல்லாம் தூசியேரி
மூலையில் விட்டு கணினி வாசிக்க
கண்டதெல்லாம் இசையென்கிறான்
புரட்சி என்று சொல்லிவிட்டு
பார்த்து செய்த வீணையை
புழுதியில் எறிகிறார்கள்
இசை இன்னும் அநாதை ஆகவில்லை
எங்கள் நம்பிக்கைக்கும் உயிர் போகவில்லை ...