60களில் வாழ்ந்த என் தாத்தாவின்
எதிர்த்த வீட்டு தாவணி தேவதை
மீதான காதல் இன்னும் உயிருடன்
நாட்குறிப்பின் நடுவே இருந்தது...
80களில் வாழ்ந்த பெரியப்பா
பத்தாம் கிளாசு படிக்கையில
பதினொன்னு படிச்ச வாணி மீதான காதல்
இன்னும் பச்சையமாய் மார்பின் இடப்பக்கம்
எதிர் வீட்டு தாவணி தேவதை
அவள் காதலன் வாங்கித்தந்த
சல்வாருக்கு மாறிப்போனாள்
குளிவிழுக சிரிச்சு பாசத்தில் நனைச்ச
கல்லூரித் தோழி தன் காதலுக்கு
என்னிடமே கவிதை கேட்டாள்...
என் அத்தை மக கருவாச்சி கூட
கல்லூரி காதலன் வாங்கித் தந்த
பௌடரில் வெளுத்து அழகாகி இருந்தாள்
என் அலுவலகத்தின் பூங்காவில்
காற்று வாங்க போனேன்...
அங்கே செருப்பு கூட ஜோடியாய் இருந்தது
என்னைத் தவிர...
இதோ என்னை கடந்து போகும்
இந்த பெயர் தெரியாத தேவதை
அழகாகத்தான் தெரிகிறாள்...
உன் பாதியென்று கடவுளின் குரலும் கேட்குது...
ஆனால் நிச்சயம் இவளுக்கும் காதல் இருக்கும்...
என் காதல் எங்கே இருக்கும்?
பி.கு. - ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை எதிர்காலத்தை நடுங்க வைக்கும். உணவிற்காக சண்டையிட்ட நிலை போய், பெண்ணிற்காய் சண்டையிடும் நிலை வரும்... பெண் சிசுக் கொலையை நிறுத்துங்கள்.
nalla irukkunga :)
ReplyDelete