Sunday, July 8, 2012

அயோக்கியக் கவிஞன்

சப்ப பிகரு மச்சி
என்று வீதிகளில் சொல்லி திரிபவரெல்லாம் 
கருப்பு, குள்ளம், எத்துப் பல்
என்று  திருமணசந்தைகளில் குறைபேசுபவரெல்லாம்
அழகுக்கு இலக்கணம் வகுத்தவறல்ல...

இருந்தும் வெட்கமின்றி
வாய் பேசுபவர் போலே நானும்...

பிளாஸ்டிக்கில் வாங்கிய காய்கறிகள்,
சமைந்து எனக்கு உணவாகி மிச்சங்கள்
அதே பிளாஸ்டிக்கில் குப்பை போகிறது...
இப்படி தினமும் மண்ணை மாசுபடுத்திவிட்டு 
பூமி மாசுபற்றி அக்கறையாய் கவிதை எழுதினேன்...

அம்மாவை நோக வைத்த  நாட்களுண்டு
அப்பா சொல் கேளாது போனதுண்டு...
இன்று அன்னையர் தினம் தந்தையர் தினத்தில்
புகழ்ந்து அவர்களை தள்ளுகிறேன் கவிதைகளாக...

என் கண்கள் மண்ணிற்கு தான்
என் ரத்தம் முழுக்க அழுக்கு தான்...
ஒரு தானம் செய்யாத நானோ...
உடலுறுப்பு தானத்திற்காயும் கவி பாடினேன்...

படிக்காத  உணவக பையன் கூட
என்ன சாப்பிடுரிங்க அண்ணா என்கிறான்...
படித்த நானோ four idli என்றதுண்டு
இருந்தும் சாகும் தமிழை காப்பதாய் கவிதைகள்...

இது மட்டுமில்லை என்னால்
ஒரு குழந்தை தொழிலாளியாகிறான்
ஒருவன் மனதில் காயமடைகிறான்
எரிசக்திகள் நீர் வீணாகுது
வயல் நிலங்கள் வீடாகுது
என்று நீள்கிறது பட்டியல் ...

தவறை செய்பவன் அதைபற்றி
அறிவுரைக்க தகுதி இல்லாதவன்
என்றார் நபிகள் ...
நான் தகுதி இழந்த அயோக்கியன்...
தவறை உணர்கையில்
அயோக்கியன் புனிதமாவதாய்
சொன்னது மகாபாரதம் ...
இன்று தவறுகளை உணர்கிறேன்...


2 comments:

  1. மனித இனத்தின் முரண்கள் இவை.உணர்ந்தவர்கள் புனிதரே!
    நன்று

    ReplyDelete
  2. ஹா ஹா,சிறப்பாக உள்ளது கவி ...புரட்சியின் விருட்சமாக இல்லை என்று வருத்தபடதிர்கள் ...உங்கள் கவி விதையாக இருக்கட்டும்

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்