வழுக்கை தலைகளில்
அழகு கேசம் முளைவிடுமா?
அப்படித்தான் முதல் காதலை
இன்னொருத்தியின் பாசம்
முற்றிலும் ஈடு செய்திடுதலும்...
கொடுக்கை இழந்து மாண்டக் குளவி
மீண்டு எழுந்து உயிர் பெறுமா?
அதுபோல் தான் இரண்டாவது வந்தவளை
உண்மைக் காதலென்று பிதற்றுவதுவும்...
குற்றிய பச்சையம் தளும்பின்றி
தொலைந்து போகுமா?
அப்படித்தான் தோற்றக் காதல் மறந்து
தேற்றிக் கொண்டேன் என்பதுவும்...
இரண்டு உடலுக்குள் வாழ முடியுமா?
இரண்டாவதாய் காதலிப்பதும் அப்படித்தான்
இருதயம் கர்ப்பப் பையல்ல
இரண்டு காதலை சிசுவை சுமக்க...
கர்ப்பகிரகம் ஒரு காதல் தான் குடிகொள்ளும்...
வேரோடு புடுங்கியப் பின்
சடமாய் இருக்க நான் மண்ணல்ல
சாதாரண மனிதன்...
எந்த திவ்யாவும் அந்த திரிஷா
ஏற்படுத்திய வெறுமையை நிறைக்க முடியாது
நிறைத்தாலும் ஈடாகாது...
அழகு கேசம் முளைவிடுமா?
அப்படித்தான் முதல் காதலை
இன்னொருத்தியின் பாசம்
முற்றிலும் ஈடு செய்திடுதலும்...
கொடுக்கை இழந்து மாண்டக் குளவி
மீண்டு எழுந்து உயிர் பெறுமா?
அதுபோல் தான் இரண்டாவது வந்தவளை
உண்மைக் காதலென்று பிதற்றுவதுவும்...
குற்றிய பச்சையம் தளும்பின்றி
தொலைந்து போகுமா?
அப்படித்தான் தோற்றக் காதல் மறந்து
தேற்றிக் கொண்டேன் என்பதுவும்...
இரண்டு உடலுக்குள் வாழ முடியுமா?
இரண்டாவதாய் காதலிப்பதும் அப்படித்தான்
இருதயம் கர்ப்பப் பையல்ல
இரண்டு காதலை சிசுவை சுமக்க...
கர்ப்பகிரகம் ஒரு காதல் தான் குடிகொள்ளும்...
வேரோடு புடுங்கியப் பின்
சடமாய் இருக்க நான் மண்ணல்ல
சாதாரண மனிதன்...
எந்த திவ்யாவும் அந்த திரிஷா
ஏற்படுத்திய வெறுமையை நிறைக்க முடியாது
நிறைத்தாலும் ஈடாகாது...
ம்ம்ம் ... அருமை
ReplyDeleteமுற்றிலும் உண்மை.முதல் காதல்தான் காதல்.
ReplyDelete