Thursday, July 19, 2012

தம்பி மணி என்ன?


கிழக்கால சூரியன் வந்துட்டான்
மணி ஆறு ஆச்சு இன்னும் என்ன தூக்கம்...
மாட்டுக்கு  தண்ணி வைக்கணும் எந்திரிடே

உச்சானிக்கு வந்துபுட்டான் சூரியன்
இன்னும் அஞ்சு மூட்டகூட காயு சேரல
அங்க என்னவே பேச்சு...
சட்டு  புட்டுன்னு வேலைய பாருங்க

சோத்துப்பான அடி மாதிரி கருத்து போச்சு வானம்...
இனி என்னடி வயசு பொண்ணுக்கு வெளிய வேல?

சூரியன் பாமரர் கடிகாரம்

கிழக்காம  போற ரயிலு போவுது
மணி நாலாவுது
பரிச்சைக்கு எந்திருச்சு படிலா

மில்லுல சங்கு அடிச்சுருச்சு
மணி எழு ஆவுது
எழுந்திருச்சு பள்ளிக்கூடம் கிளம்புளே

நியூஸு போட்டுட்டாங்க
மணி எட்டாச்சு
இன்னும் சோறு வடிகலியா நீ

இயந்திரங்கள்  தான்
உழைப்பாளர் கடிகாரம் 

அத்திபூக்கள் போட்டச்சோ;
மணி 12 இப்ப கரண்ட் போயிரும்

திருமதி  செல்வம் போட்டுட்டான
மணி  எட்டாச்சு
இப்ப அவுக வந்திருவாக

செல்லமேவே இப்ப தான் போட்டிருக்காங்க
அதுக்குள்ள பசிக்குதுன்னு
ஏன் என் உசிர எடுக்குரிங்க

மாமியார் மருமகள்களின்
கண்ணீர் தான் பெண்கள் கடிகாரம் 

ராஜேஷ் ஆன்லைன் வந்துட்டாரா
மணி பத்து ஆயிருச்சு
இன்னும் ஒரு வேல முடிக்கல

ஸ்வப்னா  டீ பிரேக் கூப்பிடுறா
மணி பதினொண்ணு ஆயிருச்சு
15நிமிசத்துல call இருக்கு

கனடா-ல இருக்குற JohnWingler-க்கு
பிங் பண்ணி சந்தேகம் கேக்கணும்
பூமியின்  அந்தப்பக்கம் என்ன நேரம் இது ?


கடிகாரத்திற்கு மட்டுமல்ல
இவனுக்கும் ஓய்வு கிடையாது
இது மென்பொருள் கடிகாரம்






2 comments:

  1. கடிகாரத்திற்கு மட்டுமல்ல
    இவனுக்கும் ஓய்வு கிடையாது
    இது மென்பொருள் கடிகாரம்

    காலம் மாற கடிகாரமும் மாறியதோ!

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்