Monday, July 16, 2012

கற்பு களவு


பெண்ணின் கற்பையும்
ஆண்களின் பெயரையும்
சேர்ந்து கெடுக்கும்
ஆண்மைத்தனம்... கற்பழிப்பு

ஆசை என்னும் மலம் தின்றவன்  
காமம் என்னும் மூத்திரம் குடித்து 
தாகம் தீர்த்தானம்... கற்பழிப்பு 

பெண் கற்பிழந்தாள்
என்றது  உலகம்...
அவன் ஆண்மை இழந்தான் 
என்பது... உண்மை...

ஊசி துளையுள் அனுமதியின்றி
நுழைந்த ஒரு நூல்...
பட்டுத்துணியை கிழித்தது ஏன்?


முட்கள் இல்லாமல் ரோஜா பார்த்ததும் 
விரல்களுக்கு திமிறேறியதோ?
கொடுக்கில்லாத  தேனீ என்பதால் 
எவன் வாய்க்கும் தேன் கேட்குதோ?

இத்தேசம் சூத்திரம் சொன்னது 
உன் மனையாளோடுகளிப்புறத்தான்
தவிர... அடுத்தவளை சீரழிக்க அல்ல!

பரத்தையாகிப்  போனவள் கூட 
மகள் மானம் காக்க போராடையில்
பணத்திற்காய்  மகளை அடுத்தவன் 
பாய்க்கு இறையாக்கும் பேய்களுண்டு
இவன் பசிக்கு ருசி வேண்டும்
அது மகளானாள் என்ன? பிஞ்சு மலாரானால் என்ன?
என்று சொல்லும் மிருகங்களுண்டு
கல்லுக்கு புடவை சுற்றி இருந்தாலும் 
ஆசைக்கு அடிபணிய சொல்லும் 
அசிங்கங்கள் உண்டு... 
இவர்கள்  நடுவில் மாதவம் செய்து 
பிறந்தவளோ பாதாளத்தில் வீழ்கின்றாள்

இங்கே சிவலிங்கம் என்று தெரியாமல் 
கால் தூக்கும் நாய்களுண்டு...
நீ கல்லெடுக்கவிடில் குறைப்பதுவும் கடிக்கும்...


பின்குறிப்பு - ஒரு தோழி முகப்புத்தகத்தில் அசாம் கற்பழிப்பு வழக்கு பற்றி எழுதியது தொடர்ந்து... என் தேடலில் கிடைத்தவை... சட்டத்தின் கண்களில் சிக்கியவை இங்கே... கூகுளின் கண்களில் சிக்கியவை இங்கே... இவைகள் படித்த பின்பு என் கன்னத்தில் ஒரு செருப்படி உணர்ந்தேன்.




1 comment:

  1. மனித சமூக அவலங்களை வன்மையாக சாடிடும் தங்களுக்கு முதலில் ஒரு சல்யூட்! அருமையான படைப்புகளை எழுதிவருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் . வாழ்த்துக்கள்!

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்