Monday, July 23, 2012

அவசர "முடிவு"



நாம் எல்லாம் ரப்பர் கொடுத்து
மிட்டாய் பங்கு வாங்கிய வயதில்
இன்று இருதயம் கொடுத்து
முத்தம் பரிமாறிக் கொள்கிறார்கள்...
.
தெய்விகம் என்று சொல்லி
தொடங்கிய என்பது சதவிகிதம்
எம்  எம் எஸ் ஸ்கேன்டலாகி
தெருவுக்கு வருகிறது...
பத்திரிகை அனுப்பி
வராதே என்கிறது...
இவள் இல்லாத நேரத்தில்
இன்னொன்று கேட்கிறது...
அமிலம்  ஊற்றி, எரியும்
வஞ்சக நெருப்பு அணைக்கிறது...

மூன்று  முடிச்சு போட்டு
இறுக்கி கட்டியும்
மூன்று மாதம் முழுகாத செய்தியைகூட
விவாகரத்து நீதிமன்றத்தில் தான்
சொல்லிக் கொள்கிறார்கள்...

ஹார்மோன்களின்  சேட்டைகளால்
சேவல் பாராமலே முட்டை வரும்
பத்தினி கொழிகளிடமிருந்து...
அதை  தின்று இன்று
15 16 ல் மலர வேண்டியது
13 க்கு முன்னமே  பற்றிடுது
பெற்றோர்  வயிற்றில் நெருப்பாக...

சென்னை வாழ்க்கை, குடும்பத்தில்
ஐந்தாவது ஆளை சுமையாக  காட்ட
பொண்டாட்டியின் செல்லம்(2வது) ஜிம்மிக்கு,
புடவைக்கு  ஒன்றாய் ஒன்பது  செருப்புக்கு
இருக்கும்  இடம் கூட இல்லாமல் போக
முதியோர் இல்லங்களுக்கு தாழ்
தேவை இல்லாமல் போனது...

தலைக்கவசம் இல்லாத அவசர பயணி...
விலாசம் இல்லாத நகரத்து கடிதம் போல
மனைவி குழந்தை என்னும் சுவர்க்கமிருக்க 
விலாசம் மாறி நரகம் செர்ந்துவிடுகிறார்கள்

உறவுகள் அந்த போல்டருக்குள்
கல்லூரி நினைவுகள் இந்த போல்டருக்குள்
நட்பென்றால்  ஹாய் ஹலோவென
இப்படி எல்லாம் சுருங்கிப் பொய் கிடக்க
வேற்று காகிதத்திற்காய் எல்லாத்தையும் இழக்கிறான்

தன்னை  சீண்டும் வரை
முட்சேடியும் தப்பில்லை என்று
வேதாந்தம் பேசுகிறான் அவன் தலைமேல்
காலப் பறவையின் எச்சத்தொடு
முட்செடியின் விதையும் விழுந்ததை உணராமல்...

இருக்கும்  வாழ்க்கை உணராமல் 
தேடலின்  பொது தொலைக்கிறான்...
ஆயிரம் பேர் நுழைக்கிற அண்டாவுக்குள்
வாழ்க்கை என்னும் அவசரத்தால்
சுண்டு விரல் நுழைக்க வழியின்றி முழிக்கிறான் ...


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்