அவள் முறைத்துப் பார்த்தும்
விடாது துரத்தும் ஒரு தலை காதல் கூட,
மச்சான்காரனின் மிரட்டலில் பயப்படும்...
என்னுளிருக்கும் உன் நினைவை
எதை கொண்டு மிரட்ட விரட்ட?
சம்பள சனிக்கிழமைகளில்
தூரத்துக் கிராமத்து கடைசி பேருந்தின்
பரவிக் கிடக்கும் சாராய வாசனை கூட,
வீசும் காற்றில் கொஞ்ச நேரம் பரதேசம் போகும்...என்னுள் நிறைந்த உன் நினைவுகளோ,
குருதி பாயா இடம் கூட பரவிக் கிடக்கு!
இனி இதை தொடக் கூடாது
என்ற பெரும் குடிகாரன் கூட,
மறுநாள் வரை காப்பாற்றி விடுகிறான்...
நான் இன்னும் உன்னை மறக்கபோவாதாய்
உறுதி மொழியக்கூட முடியாமல் தோல்வியில்...
சயனைடு சுவையை
எழுத முற்படும் மூடனாய்,
உன்னை மறக்கும் முயற்சியில் நான்...
ஒரே வித்தியாசம்...
உயிர் போகமால் மரணித்துக்கிடக்கிறேன்...
No comments:
Post a Comment