Saturday, April 28, 2012

என் காதல் ராமாயானம்


சீதை  அவள் பார்வையாலே
காதல்  நாணேற்றுகிறாள் 
என்  இருதய தனுசு வளைத்து...
கண்களால்  மாலைமாற்றி 
இருதயங்களுக்குள் சுயம்வரம்...

அவள் கண்கள் என்னும் 
கைகேயி வாங்கி வைத்த வரமோ?
இந்த  ராமனுக்கு காதல் வனவாசம்...

பிரிவு என்னும் சூர்பனகை
ராமனைத் தழுவிக்கொள்ள
ஆவல்  கொண்டாள்...
அவள்காதல் என்னும் லட்சுமணன்
கூர்வாளிடம் மூக்கறுபட்டு
பிரிப்பேன்  என்று சூளுரைத்தாள்

கைகள்  கொண்டு
மாயமாய் ஓடும் கால மானை
பிடித்துப் பார்க்க சீதை ஆசைபட
ஓடி மறைந்த காலம்  சூற்பனகையின்
சபதம் நிறைவேற்றியது...

சமூகம் என்னும் ராவணன்
சாதி என்னும் விமானத்தில்
கடத்திப் போனான் என் சீதையை
என் கண்ணீர் சடாயுவின் இறகு வெட்டிப்போட்டு...

இங்கே ராமன்
தனிமை என்னும் அசோகவனத்தில்
கவிதை என்னும் அரக்கி சூழ...

எந்தக் கனையாளியும்
அவளுக்கு என்னை
அடையாளம் காட்டவில்லை
வாலில் தீ மூட்டி
என்னை மீட்டுப் போக
அனுமனும் இன்னும் வந்துசேரவில்லை

சமூகம் என்னும் ராவணனிடம்
மயங்கிப்போனலோ தெரியவில்லை
என்னை மறதி என்னும் தீயில் இறங்கச் சொல்கிறாள்...

ராவணனிடம் கடன் வாங்கி
வார்த்தை கணை அவள் வீச...
ஆயிரம் தலை கொண்ட என் காதல்
ஒவ்வொன்றாய் மடிகிறது...
மறக்க  மட்டும் முடியவில்லை...

என் இருதயத்தை
களவாடிய திருடி இவள் தான்...
ஏனோ, வால்மீகி நானாகி
என் காதலை இதிகாசமாக்குகிறேன்...


Thursday, April 26, 2012

பெண்களை ஒடுக்கும் ஆதிக்க ஆண்கள்



























முன்குறிப்பு :
இது உண்மை என்று தெரிந்தும் இல்லை என்று மறுத்தால் பொய்யாகிவிடாது...

ஆண்டாண்டுகாலமாய்
புறாக்களின் சிறகுகளில் விலங்குகள்
காரணம் ஆராய்ந்தால்
காலத்தின் சுவர்களில் எல்லாம்
ஆண்கள் ஆதிக்கம் என்ற கல்வெட்டு...

தரை அதிர நடக்காதே
சோம்பல்கள் முறிக்காதே
சபைதனிலே பேசாதே
வீடு கூட்டு சமைக்கப் பழகு
என்று அதட்டி அதட்டி
உன்னை அடிமையாய் வளர்த்த
உன் அன்னை ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்

அவன் இழுத்த இழுப்புக்குப் போகாதே,
கொஞ்சம் விட்டு புடி
அவன் கைப்பேசி மெமரி முதல்
மாதந்திர பில் வரை சோதித்துப் பார்
என்று உன் நெஞ்சில் நஞ்சை விதைக்கும்
தோழி ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்

என் புருஷன் வாங்கிக்கொடுத்த
பத்தாயிர ரூபா பட்டுப்புடவ
என்று உன்னை ஏக்கத்திலயே வாழவைக்கும்
உன் சகோதரி ஒரு பெண்

இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
ராகுகாலத்தில் சமைந்தவளே
வீடு நுழைந்ததும் என் மார்வலிக்கச் செய்தவளே
நெளிஞ்ச பாத்திரம் பெத்த கட்டிலும் சீராய் கொண்டுவந்தவளே
இப்படி தினம் உன் கன்னம் இடிக்கும்
உன் மாமியாரும் ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்

யாருக்கு செய்யுற உன் மகளுக்குத்தானே
பாத்து செய் ஊரு மெச்ச பகட்டா செய் ...
என்று உன் தலையை உருட்டும்
உன் சம்பந்தியும் ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்

ஒற்றைக் கண்ணீரில்
தொப்புள்கொடி உறவை அழித்துவிட்டு
தாலிக்கொடியோடு போன பிறகு
தான் ஊர் சுற்றிய புகைப்படம் காட்ட மட்டும்தான்
ஆத்தாக்காரி நியாபகம் வரும்
அந்த மகள் ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்

அம்மா என் மாமியாக்காரி
அஞ்சு பவுன் சங்கிலி கேக்குற உன் பேரனுக்கு என்று
உன் மாமியா தொல்ல முடியும்முன்ன
அவ மாமியா சுமையா உன் தலையில இறக்கும்
உன் மகளும் ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்

சீதை அசோகவனத்தில்
சீரழிய கைகேயி சுற்பனகை தான் காரணம்
அனால் ராவணன் தானே வில்லணாய் சித்தரிக்கப்படுவது
பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்

Tuesday, April 24, 2012

சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


முன்குறிப்பு : இங்கே விளையாட்டுத் திறமை பற்றி மட்டும் பேசுவோமாக 

நீங்கள் பார்த்த பரந்தாமன்கள்
கையில் வேலும் சூலும் வைத்திருந்திருக்கலாம்...
இந்த முகப்புத்தாக சந்ததி பார்த்து வளர்ந்தது என்னமோ
கிரிக்கெட் மட்டை கையில் வைத்திருந்த கடவுள் தான்...

16  வயது இளங் கன்றொன்று  
பயமறியாமல் நின்றதன்று, விளைவு...
பந்துகள் காணாமல் போகும்
அதிசயம் பார்த்தது மைதானங்கள்

ஆறு முறை உலகக் கோப்பைகள்
கடவுளின் தேசம் வர தவம் இருந்தது...
ஆறாம் முறை இவனது வரம் கிடைத்தது

இவன் எட்ட எவனும்
கட்டி வைக்கவில்லை இலக்குகளை...
அனால் இவன் தட்டிய எல்லாமே
எட்ட முடியா இலக்குகளே...

கணித மேதைகள் கண்டுபிடித்த
இலக்கங்கள் எல்லாம்
அட்டவணைக்குள் சிறைகிடந்தது
இவன்தான் சதங்களால் மீட்டெடுத்தான்

இங்கே பலர் எண்ணக்  கற்றதே 
இவன் அள்ளி எடுத்த ஓட்டங்களில் தான்...

இன்னமும் கல்வி வாசம்
அறியாத பட்டிக்காட்டில்
என்ன ஆகணும்னு கேட்டா
பச்சிளம் மழலையும் அழகாய் சொல்லும்
தெண்துல்கர் என்று... அன்பு கசிய

எந்த விருது எவன் கொடுத்தால் என்ன
எங்கள் இருதய விருது உனக்குத்தான்...
எந்த தேசத்தில் நான் பிறந்தால் என்ன
எங்கள் சுவாசத்தில் சகோதரத்துவம் உன்னால்

இவன் 99லையே  ஆட்டம் இழந்தாலும்
எங்கள் நெஞ்சில் 100 ஐ தாண்டி
என்றும் நிற்பாய் அன்பின் ஓவர்களில்  

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா...

பின்குறிப்பு : கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்த ஒரு சில விசயங்களில் நீயும் ஒருவன். உனக்கு இது சமர்ப்பணம்.

தொடர்புடைய கவிதை +




Sunday, April 22, 2012

உறங்காத இரவுகள் - 4

உறங்காத இரவுகள் - 1 | 2 | 3


பெண்களின் இருதயம்
அமுதை தரும் பாற்கடல் தான்...

உள்ளே நஞ்சும் இருக்கும் மறவாதே!!


எந்த நீலகண்டன் கழுத்தில் சுமப்பனோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவள் முகம்
ஒருக் கவிதை அரங்கம்

நொடிக்கொரு கவிதை

அரங்கேறிக் கொண்டே இருக்கும்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் எல்லா கூகிள்-களிலும்
"நான்" என்னும் தேடலுக்கு

"நீ" என்னும் விடைதான்...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் முகப்புத்தகம் தேடல் இடம்
சந்திக்கும் ஒரே சவால்

"உன் பெயர்" ...

இதுவரை உன்னைக் கண்டுபிடிக்காமல்
அது சவாலாகவே இருக்கிறது... 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
28 வயது ஆணிடம்
உன் வருங்கால மனைவி
எப்படி வேண்டும் என்று கேட்டால்...

பெயரைத் தவிர

அவன் சொல்லும் எல்லாவற்றிலும்
அவன் பழைய காதலி தான் இருப்பாள் அடையாளமாய்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்லா படி
நல்ல வேலையை பிடி
கை நிறைய சம்பாதி...
பின் நீ தேடிய பெண்
உன்னை தேடி வரும்
என்றது சமுகம்...

கேட்டேன் சமத்தாய்...

இதோ சொல்லாத என் காதல்
செல்லாமல் போனது...
அவள் அவனுடன் commited முகப்புத்தக வாசகத்தில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெண் பெயரை வைத்து
முகப்புத்தகத்தில் புலம்பினாலும்

அதற்கும் ஒரு கூட்டம் கைத்தட்டும்...

Wednesday, April 18, 2012

உறங்காத இரவுகள் - 3

உறங்காத இரவுகள் - 1 | 2


ஆங்கிலம் என்ன மன்மதன் மொழியா?
ஆண்கள் கடக்கும் பெண் கூட்டமும்
பெண்கள் கடக்கும் ஆண் கூட்டமும் 
அதையே பேசுகிறது...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

இடப்புறம் காதலி நடக்க,
நடந்து போறவன்
வலப்புறக் காது செவிடனாகிறான்

அதனால் தான் அறிவு 
கூப்பிட்டும் பாராமல் போகிறான்...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

காதல்  ஒருக் கொசுக்கடி இரவு...
எந்த சக்தி கொண்டும் 
அது கடிப்பதை தடுக்க முடியாது...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

என் காதலை சொன்னேன்
உளறல் என்று போனாய் நீ...

இன்று உளறித் திரிந்தேன்
கவிதை என்கிறது உலகம்

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

வாழ ஆசைப்பட்டு எல்லோரும்
குடிக்கும்  விஷம் காதல்

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

சக்தியை அழிக்கவோ ஆக்கவோ
முடியாதென்றது ஆற்றல் அழியா விதி...

நான் காதலை ஆக்கிவைத்தேன்,
நீ அதை அழித்து விட்டாய்...

என் வாழ்வை மட்டுமல்ல
அறிவியலையும் போய்க்கச் செய்தோம்...

Monday, April 16, 2012

உறங்காத இரவுகள் - 2

உறங்காத இரவுகள் - 1
 
நிலவே உன்னால் 
என் இருதயத் தரையில்...
உயிர்கடல் கொஞ்சம் கொந்தளிக்குது... 
தூக்கத்தை அடித்து செல்லுது

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+. 

இருதயம் மட்டும் தான்
எளிதாய் உடையக்கூடிய
வைர வகை...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+. 

ஆர்கமேடிசின் பேத்தி அவள்...
நிறைந்த காதலுக்கு சமமாய்,
உறக்கத்தை வெளியேற்றிவிட்டால்...


+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+. 

இருதயம் மட்டும் 
கல்லில்செய்யப்பட்ட
சிலைகள் பெண்கள்...

கற்களில்  காதல் பூச்செடி 
தழைப்பது கடினமல்லவா?
அதான் பல காதலைகள் 
ஒருதலையாகவே மடிந்து போகுது...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+. 

பெண்களின் இருதயம் காதல் சுடுகாடு...
இங்கே இவர்களின் கண்கள் பற்றவைக்க 
அவர்களின் உதட்டு வார்த்தை உளைமூட்ட 
பலக் காதல்கள் உயிரோடு எறிந்து போகும்...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+. 

அவளுக்கு எதிர்காலத்தை
காட்ட ஆசைப்பட்ட என் காதலை 
இறந்த  காலமக்கிவிட்டாள்...



நேற்றைப் பார்த்தேன்


நாம் படித்த கல்லூரிக்கு
போய்  இருந்தேன்...
இன்னும் என் நினைவு
நீ வராமல் போன
அந்த நாள் தொட்டு
உனக்காய் காத்துக் கிடக்குது
வாசல்  பார்த்து...


நான்  வணங்கிய
கோவிலுக்குப் போய் இருந்தேன்
அங்கே கணபதி சிரித்திருந்தான்
நம்மைப் பிரித்து தனக்குத் துணையாய்
என்னை ஆக்கிய சந்தோசத்தில்...

நம் கணினி ஆய்வகம் போனேன்...
என்றோ நீ பார்க்க
நான் எழுதிய ப்ரோக்ராம்
மின்வெட்டின் உதவியால்
ஓய்வெடுத்துக் கிடந்தது...


நீ வகுப்புவராத நாட்களுக்காய்
நான் எழுதிய வகுப்புக்குறிப்புகளை
இன்று புரட்டிப் பார்க்கிறேன்...
நீ வாங்கிப் பார்த்த உன்
கைரேகைகள் கனத்தது...


என் துணிப்பெட்டியை
உருட்டிப்பார்த்தேன்...
என் உடைகள் உன் உடை
நிறம் பொருந்திய அந்நாட்களை
எண்ணி ஏங்கியே சாயம் போய்க் கிடந்தது...

என்  கவிதைகளைப்
புரட்டிப் பார்த்தேன்...
என் காதல் என் கண்ணீர்
கடலுக்குள் தற்கொலை செய்து
எழுத்துப் பிணமாய் கரையோதுங்கிக் கிடந்தது...

நான் காதல் சொன்ன
அந்த இடம் போனேன்...
அன்று நீ உடைத்துப் போட்ட
என் இருதயத்தின் ரத்தத்தில்
இன்னும் குற்றுயிருடன் கிடக்குது
என் காதல்... நீ ஏற்றுக்கொள்வாய் எனும் நம்பிக்கையில்...


வலியின்மொழியில் நீ எழுதிய 
என் நேற்றை, என் காதலை
நான் திரும்பிப் படித்தேன்...

என் கண்ணீர் மொழியில் மொழிபெயர்த்து...

Wednesday, April 11, 2012

உறங்காத இரவுகள் - 1



சூரியனே! உண்மையை சொல்
நீ பூமிக்கு தாயா? மாமியாரா?
இந்த வாட்டு வாட்டுகிறாய் கோடையாய்

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

என்  வீட்டுக் கொசுக்களுக்கு
வேலை இல்லாமல் போகிறது...
என் உறக்கத்தை திருடுவதில்
நீ முந்திக்கொண்டதால்...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

என்  கண்ணீர் கடிதத்தை
அவளுக்கு மொழிபெயர்க்கத்
தெரிவதே இல்லை...

 தெரிந்திருந்தால் சொல்லப்படும்
என்  காதல்
புரிந்திருக்குமல்லவா?

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

32 சூரியனை
ஒற்றைத் துளி நீர்
அனைத்துவிடுகிறது... கண்ணீர்

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.
உன் புன்னகையால்
தொடங்கப்பட்ட என் கவிதை
முடிக்கப்படுவது என்னவோ...
என் கண்ணீரின் முற்றுப் புள்ளிகளில் தான்

 +.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

அவள் இதழ்
குறள் வெண்பா...

அதன் ஒன்றன் விதியில்
எழுதப்படும் குறள்களே...

என்றன் உலகப் போதுமரையாச்சு...
+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

அந்த கடிகாரம் என் ஆயுளை
திருடிக்கொள்கிறது இரு கரங்களால்...

என்  பேனா
வெறும் நீலமை கொண்டே
என்னை வசியம் செய்கிறது...

அவள் விழி மறுத்த பிறகு
தமிழக  அரசே கொடுத்தும்
எனக்குள் 24 மணிநேர மின்தடை போல்...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

முதியோர் இல்லத்தில்
தாய் தந்தையை
பார்க்கப் போகும் ஒவ்வொரு முறையும்
மற(று)ந்(த்)து போகிறான்...

அவர்களின் கட்டிலை தட்டினை
தனக்கென்று எதிர்காலத்திற்கு
முன்பதிவு செய்துகொள்ள...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

வன்மம், கோபம், வஞ்சம், போதை, 
காமம், காதல், சுயநலம், தலைக்கனம் கலந்த

உலகின் கொடிய விசத்தை 
பருகும் கொசுக்களுக்குமட்டும்
எதுவுமே ஆவதில்லையே எப்படி??



Monday, April 9, 2012

துளிகள் - 8

துளிகள் - 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

வெறும் ஆறடி தெரு நீயடி...
உனக்குள் என் முகவரியைத் 
தொலைத்துவிட்டு  திரிகிறேன் ஏனடி?
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

தனியாய் சிரிப்பதுதானே
பைத்தியம் என்றாய்...

நான் ஏன் காதலில்
தனிமையில் அழுகிறேன்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என் வாழ்வில் நீ இருந்த
அந்த ஒன்றிரண்டு ஆண்டுகளைத் தான்
திரும்ப திரும்ப
வாழ்ந்து பார்க்கிறேன் என் தனிமையில்

அதனால் தான்
உனைத் தொலைத்ததை
என் இருதயம் நம்ப மறுக்குது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உனக்கே தெரியும்
இருதய நோயை paracetamol ஆல்
குணப்படுத்த முடியாதென்று...

அப்படித் தான்
நீ உருவாக்கிய வெறுமையை
வேறு எதாலும் நிறைக்க முடியாது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உன்னை மறக்க
என் இருதயத்துக்குள்
நொடிக்கு நொடி
ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்தேருது...

ஏனோ இறுதியில்
உன்னை நான் காதலிக்கிறேன்
என்பதையே தீர்ப்பாக்கி முடிக்கிறேன்...

மூடிக்கிடப்பவைகள் - 4

மூடிக்கிடப்பவைகள்  - 1 | 2 | 3
மருமகள்களாய் பெண்கள்
தாங்கள் வடித்த கண்ணீருக்கு
தான் மாமியார் ஆனதும்
மருந்திட ஆசைபடுவதைவிட
பழிவாங்கத்தான் துடித்துக்கிடக்கிறார்கள்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

ஒவ்வோர் அலுவலகங்களில்
எழுபத்திஐந்து விழுக்காடு உயிர்கள்
வெட்டியாய் இருக்கிறது...
மீதி இருபத்திஐவரின் வியர்வைகள் தான்
இவர்களுக்கும் ஊதியம் கொடுக்கிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என்று வியர்வை, உழைப்பால் வராமல்
வெறும் வெட்கையால் வந்ததோ...
அன்றே உலகம் அழிந்துவிட்டது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என்று தன் உரிமையால்
அவனை அதிகார நாற்காலியில் உட்காரவைத்து
இன்று அவனை பார்க்க வெயிலில் காய்ந்தோமோ
அவன் வாகனம் போக நெரிசலில் நசிந்தோமோ
உன் கையில் கொடுக்கப்பட்ட மந்திரக்கோல்
முழுக்க பழுக்க காய்ச்சிய இரும்பு போல்...

Tuesday, April 3, 2012

ந(கர)(ரக)ம்

கைப்பெசிக்குள் இருந்து
மின்சார கோழி கூவிதான்
இந்த கான்க்ரீட் பூமியில்
சூரியன் கூட உதிக்கும்...

இவனை  சோம்பேறி ஆக்கிய
சாபத்தை எல்லாம்
snooze பொத்தான் வாங்கிக் குவிக்கும்...

எந்த மின்வெட்டும்
எந்த விலையேற்றமும்
நிறுத்திவிடவில்லை
இவனது இயந்திர வாழ்க்கையை...

5000க்கு கீழிறங்கிய வங்கி மீதம் - குறுஞ்செய்தி,
கசங்காத நேற்றைய ஆடை,
குன்றாத நண்பனின் பெர்பியூம்,
முறைக்காத எதிர் வீட்டு பெண்,
காதலியின் திகட்டாத missed call,
கிரெடிட் கார்டு வாங்க சொல்லி அழைப்பு,
இப்படி அழகாய் துவங்கும் நித்தம்...

இந்த personal loanலையாவது
கடன் தீர்த்து கார்வாங்கனும் என்றும்,
இதோ  இவன் வாங்கும் லோனில்
கிடைக்கும் கமிஷன் வைத்து
பசி மற(றை)க்கனும் என்றும்...
இப்படி இருவரின் கனவுகளாக
உதிர்ந்து போகும் விளம்பர காகிதங்கள்...

நாகரிக பெயர்களில்
தாலியும் மார் சீலையும்
நிற்காத கழுத்துகளில்
அடையாள அட்டையாய்
தொங்கும் அடிமை சங்கிலி

பேனா பிடிச்ச கையாள
ஏர் பிடிச்ச அசிங்கமுன்னு...
ஏசி போட்ட அறைக்குள்
அடிமையாக்கிட்ட வாழ்க்கை...

எச்சில்  கரண்டியில் தின்று போட்டு
tissue காகிதத்தில் வாய் துடைக்கும்
சுத்தமும் கலாச்சாரமும் இங்கே...

கௌரவ கடன்காரர்கள் இவர்கள்
இதோ அடையாளமாய்...
பணப்பை நிறையும் கடனட்டைகள்...

மூன்றுவேளையும் தவறாத பசிக்கும்
காதலியின் கைப்பேசி topupஇற்கும்
இடையே இக்கட்டில்லாமல் நகரும் இன்று...

பசி தெருக்களின் ஓரம் அலைந்து திரிய...
பணம் kfc, pizza corner, பொன்னுசாமி
குப்பைத் தொட்டிகளை நிறைக்கும் நகரம்...


கணினியின் முன்னர்
உறவுகள்  தொலைத்த உடல்கள் கிடக்க
முகப்புத்தகத்திற்குள் உயிர்  வாழும் நகரம்...

அன்னை மடி தொலைத்தவர்களெல்லாம்
அதிக விலை கொடுத்தாவது
அரசு பேருந்தில் அயர்ந்து போகும் துயரம்...

இருவாய் காதலி இசையை பேசிதாலாட்டுவாள்
மனைவி சொல் கேட்பவன் போல்
தலையாட்டி கேட்கும் ஊரிது...

எந்த  இறையையும் பிடிக்க இல்ல
பெருகிப் போன இனநெருக்கடியை குறைக்க
மனித சிலந்திகள் கட்டிப் போகும்
கான்கிரீட் ஒட்டடை நிறைந்த நகரம்

அலுப்பில் உறங்கிப் போன ஊரு,
மின்தடையில் உறங்கிப்போன தெருவிளக்கு
நடுவில் நாய்களின் ஊளையிடுதலில்
பள்ளம் தாண்டி வழிதேடிவீடு சேரும் நாள்...

விரட்டும் பசி, ஆசை, கனவு, சவால் நடுவே...
தினம் தினம் இந்த நரகமும் கூட...
இயல்பான நகரமாய் எங்களை வாழ வைக்குது தினமும்..

------------------------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------------------------


Sunday, April 1, 2012

பெற்றுக்கொள்ளாத கடிதங்கள்

உன்னால் என் பாதைகள்
நான் அழுத கண்ணீரால் சகதியாச்சு
தாடிவச்ச தாமரைய
என் உடம்பும் அதில் மிதந்து போச்சு

அடி சர்க்கரையே! காதல் வாயால்
உன்னை  தின்றதின் விழைவு பார்
என் கண்களுக்கு நீரிழிவு நோய்...

காதலில்  மட்டும் அரை வைத்தியனாக
ஆயிரம் பேரின் மரணம் தேவைபாடுவதில்லை
இதோஎன் ஒருவனைக் கொன்றுவிட்டு
காதலின் மருதுவச்சியாகிறாள்,
வலி என்னும் தீராத நோய் தருவதற்காய்...

எந்த வார்த்தை கொண்டு
என் காதலை உனக்கு புரிய வைக்க
என் காதலின் எந்த ஆழம் காட்டி
சாதியைவிட என் காதல் உயர்வென்று
புரியாத உன் பெற்றோருக்கு உணர்த்த...
என்னிடம் மிஞ்சி இருக்கும் ஒரே மொழி
"நான் உன்னை காதலிக்கிறேன்"

அவள் நினைவுப் பூனை
இரவு பகலெல்லாம் என் இருதயத்துக்குள்
உருட்டித் திரிகிறது... எதோ ஒரு பானையை
இதோ  கண்கள் வழி, வீனாகுது
கண்ணீராய், என் உயிர் பால்...

என் கண்ணீரெல்லாம் முகவரி தெரியாமல்
என் கண்ணத்து அஞ்சல் பெட்டிகுள்ளயே
எழுதிக் கிடக்கும் என் காதல் கடிதங்கள்...
உன் உதடுகள் தான் அதன் முகவரிகள்
முத்தக் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்