Tuesday, April 3, 2012

ந(கர)(ரக)ம்

கைப்பெசிக்குள் இருந்து
மின்சார கோழி கூவிதான்
இந்த கான்க்ரீட் பூமியில்
சூரியன் கூட உதிக்கும்...

இவனை  சோம்பேறி ஆக்கிய
சாபத்தை எல்லாம்
snooze பொத்தான் வாங்கிக் குவிக்கும்...

எந்த மின்வெட்டும்
எந்த விலையேற்றமும்
நிறுத்திவிடவில்லை
இவனது இயந்திர வாழ்க்கையை...

5000க்கு கீழிறங்கிய வங்கி மீதம் - குறுஞ்செய்தி,
கசங்காத நேற்றைய ஆடை,
குன்றாத நண்பனின் பெர்பியூம்,
முறைக்காத எதிர் வீட்டு பெண்,
காதலியின் திகட்டாத missed call,
கிரெடிட் கார்டு வாங்க சொல்லி அழைப்பு,
இப்படி அழகாய் துவங்கும் நித்தம்...

இந்த personal loanலையாவது
கடன் தீர்த்து கார்வாங்கனும் என்றும்,
இதோ  இவன் வாங்கும் லோனில்
கிடைக்கும் கமிஷன் வைத்து
பசி மற(றை)க்கனும் என்றும்...
இப்படி இருவரின் கனவுகளாக
உதிர்ந்து போகும் விளம்பர காகிதங்கள்...

நாகரிக பெயர்களில்
தாலியும் மார் சீலையும்
நிற்காத கழுத்துகளில்
அடையாள அட்டையாய்
தொங்கும் அடிமை சங்கிலி

பேனா பிடிச்ச கையாள
ஏர் பிடிச்ச அசிங்கமுன்னு...
ஏசி போட்ட அறைக்குள்
அடிமையாக்கிட்ட வாழ்க்கை...

எச்சில்  கரண்டியில் தின்று போட்டு
tissue காகிதத்தில் வாய் துடைக்கும்
சுத்தமும் கலாச்சாரமும் இங்கே...

கௌரவ கடன்காரர்கள் இவர்கள்
இதோ அடையாளமாய்...
பணப்பை நிறையும் கடனட்டைகள்...

மூன்றுவேளையும் தவறாத பசிக்கும்
காதலியின் கைப்பேசி topupஇற்கும்
இடையே இக்கட்டில்லாமல் நகரும் இன்று...

பசி தெருக்களின் ஓரம் அலைந்து திரிய...
பணம் kfc, pizza corner, பொன்னுசாமி
குப்பைத் தொட்டிகளை நிறைக்கும் நகரம்...


கணினியின் முன்னர்
உறவுகள்  தொலைத்த உடல்கள் கிடக்க
முகப்புத்தகத்திற்குள் உயிர்  வாழும் நகரம்...

அன்னை மடி தொலைத்தவர்களெல்லாம்
அதிக விலை கொடுத்தாவது
அரசு பேருந்தில் அயர்ந்து போகும் துயரம்...

இருவாய் காதலி இசையை பேசிதாலாட்டுவாள்
மனைவி சொல் கேட்பவன் போல்
தலையாட்டி கேட்கும் ஊரிது...

எந்த  இறையையும் பிடிக்க இல்ல
பெருகிப் போன இனநெருக்கடியை குறைக்க
மனித சிலந்திகள் கட்டிப் போகும்
கான்கிரீட் ஒட்டடை நிறைந்த நகரம்

அலுப்பில் உறங்கிப் போன ஊரு,
மின்தடையில் உறங்கிப்போன தெருவிளக்கு
நடுவில் நாய்களின் ஊளையிடுதலில்
பள்ளம் தாண்டி வழிதேடிவீடு சேரும் நாள்...

விரட்டும் பசி, ஆசை, கனவு, சவால் நடுவே...
தினம் தினம் இந்த நரகமும் கூட...
இயல்பான நகரமாய் எங்களை வாழ வைக்குது தினமும்..

------------------------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------------------------


3 comments:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்