முன்குறிப்பு : இங்கே விளையாட்டுத் திறமை பற்றி மட்டும் பேசுவோமாக
நீங்கள் பார்த்த பரந்தாமன்கள்
கையில் வேலும் சூலும் வைத்திருந்திருக்கலாம்...
இந்த முகப்புத்தாக சந்ததி பார்த்து வளர்ந்தது என்னமோ
கிரிக்கெட் மட்டை கையில் வைத்திருந்த கடவுள் தான்...
16 வயது இளங் கன்றொன்று
பயமறியாமல் நின்றதன்று, விளைவு...
பந்துகள் காணாமல் போகும்
அதிசயம் பார்த்தது மைதானங்கள்
ஆறு முறை உலகக் கோப்பைகள்
கடவுளின் தேசம் வர தவம் இருந்தது...
ஆறாம் முறை இவனது வரம் கிடைத்தது
இவன் எட்ட எவனும்
கட்டி வைக்கவில்லை இலக்குகளை...
அனால் இவன் தட்டிய எல்லாமே
எட்ட முடியா இலக்குகளே...
கணித மேதைகள் கண்டுபிடித்த
இலக்கங்கள் எல்லாம்
அட்டவணைக்குள் சிறைகிடந்தது
இவன்தான் சதங்களால் மீட்டெடுத்தான்
இங்கே பலர் எண்ணக் கற்றதே
இவன் அள்ளி எடுத்த ஓட்டங்களில் தான்...
இன்னமும் கல்வி வாசம்
அறியாத பட்டிக்காட்டில்
என்ன ஆகணும்னு கேட்டா
பச்சிளம் மழலையும் அழகாய் சொல்லும்
தெண்துல்கர் என்று... அன்பு கசிய
எந்த விருது எவன் கொடுத்தால் என்ன
எங்கள் இருதய விருது உனக்குத்தான்...
எந்த தேசத்தில் நான் பிறந்தால் என்ன
எங்கள் சுவாசத்தில் சகோதரத்துவம் உன்னால்
இவன் 99லையே ஆட்டம் இழந்தாலும்
எங்கள் நெஞ்சில் 100 ஐ தாண்டி
என்றும் நிற்பாய் அன்பின் ஓவர்களில்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா...
பின்குறிப்பு : கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்த ஒரு சில விசயங்களில் நீயும் ஒருவன். உனக்கு இது சமர்ப்பணம்.
+ தொடர்புடைய கவிதை +
இசைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் [A . R . Rahmaan ]
No comments:
Post a Comment