முன்குறிப்பு :
இது உண்மை என்று தெரிந்தும் இல்லை என்று மறுத்தால் பொய்யாகிவிடாது...
ஆண்டாண்டுகாலமாய்
புறாக்களின் சிறகுகளில் விலங்குகள்
காரணம் ஆராய்ந்தால்
காலத்தின் சுவர்களில் எல்லாம்
ஆண்கள் ஆதிக்கம் என்ற கல்வெட்டு...
தரை அதிர நடக்காதே
சோம்பல்கள் முறிக்காதே
சபைதனிலே பேசாதே
வீடு கூட்டு சமைக்கப் பழகு
என்று அதட்டி அதட்டி
உன்னை அடிமையாய் வளர்த்த
உன் அன்னை ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
அவன் இழுத்த இழுப்புக்குப் போகாதே,
கொஞ்சம் விட்டு புடி
அவன் கைப்பேசி மெமரி முதல்
மாதந்திர பில் வரை சோதித்துப் பார்
என்று உன் நெஞ்சில் நஞ்சை விதைக்கும்
தோழி ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
என் புருஷன் வாங்கிக்கொடுத்த
பத்தாயிர ரூபா பட்டுப்புடவ
என்று உன்னை ஏக்கத்திலயே வாழவைக்கும்
உன் சகோதரி ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
ராகுகாலத்தில் சமைந்தவளே
வீடு நுழைந்ததும் என் மார்வலிக்கச் செய்தவளே
நெளிஞ்ச பாத்திரம் பெத்த கட்டிலும் சீராய் கொண்டுவந்தவளே
இப்படி தினம் உன் கன்னம் இடிக்கும்
உன் மாமியாரும் ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
யாருக்கு செய்யுற உன் மகளுக்குத்தானே
பாத்து செய் ஊரு மெச்ச பகட்டா செய் ...
என்று உன் தலையை உருட்டும்
உன் சம்பந்தியும் ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
ஒற்றைக் கண்ணீரில்
தொப்புள்கொடி உறவை அழித்துவிட்டு
தாலிக்கொடியோடு போன பிறகு
தான் ஊர் சுற்றிய புகைப்படம் காட்ட மட்டும்தான்
ஆத்தாக்காரி நியாபகம் வரும்
அந்த மகள் ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
அம்மா என் மாமியாக்காரி
அஞ்சு பவுன் சங்கிலி கேக்குற உன் பேரனுக்கு என்று
உன் மாமியா தொல்ல முடியும்முன்ன
அவ மாமியா சுமையா உன் தலையில இறக்கும்
உன் மகளும் ஒரு பெண்
இருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
சீதை அசோகவனத்தில்
சீரழிய கைகேயி சுற்பனகை தான் காரணம்
அனால் ராவணன் தானே வில்லணாய் சித்தரிக்கப்படுவது
பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்
//ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே//,
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை நன்பரே, உண்மையும் கூட ஆனால் எல்லா இடங்களிலும் பெண்மையை அடிமைபடுத்த பெண்மையே காரணமாக இருப்பதில்லை.சில வீணாய் போன ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் ஆண்கள் மட்டும் இல்லைதானே தோழா..
Deleteஅதுவும் சரி தான்
Deleteநீங்க சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மைகள். இருந்தபோதும் இதையெல்லாம் தாண்டி
ReplyDeleteதன்னையே நம்பி வந்தவளின் மனமறியாது நடக்கும் பல பல ஆண்களை நேரிலும் கண்டியிருக்கிரேன்
அவரால் கொடுமைப்படுதபடுவதை காதாலும் கேட்டிருக்கிறேன்.
என்னதான் நீங்க சொல்வதுபோல் அதற்கெல்லாம் காரணம் பெண்ணாக இருந்தாலும் அங்கே அதிலே
ஆணுக்கும் பங்குண்டே தோழா. ஆணாதிக்கம் காலம் காலமாய் அதிலிருந்து
துளிர்விடுதே தற்காலத்தில் பெண்ணாதிக்கமும்.
நல்லதொரு பதிவும் தோழமையே பாராட்டுகள்..
ஒப்புக் கொள்கிறேன் :) நன்றி :D
Delete