வெறும் ஆறடி தெரு நீயடி...
உனக்குள் என் முகவரியைத்
தொலைத்துவிட்டு திரிகிறேன் ஏனடி?
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
தனியாய் சிரிப்பதுதானே
பைத்தியம் என்றாய்...
நான் ஏன் காதலில்
தனிமையில் அழுகிறேன்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
என் வாழ்வில் நீ இருந்த
அந்த ஒன்றிரண்டு ஆண்டுகளைத் தான்
திரும்ப திரும்ப
வாழ்ந்து பார்க்கிறேன் என் தனிமையில்
அதனால் தான்
உனைத் தொலைத்ததை
என் இருதயம் நம்ப மறுக்குது...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
உனக்கே தெரியும்
இருதய நோயை paracetamol ஆல்
குணப்படுத்த முடியாதென்று...
அப்படித் தான்
நீ உருவாக்கிய வெறுமையை
வேறு எதாலும் நிறைக்க முடியாது...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
உன்னை மறக்க
என் இருதயத்துக்குள்
நொடிக்கு நொடி
ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்தேருது...
ஏனோ இறுதியில்
உன்னை நான் காதலிக்கிறேன்
என்பதையே தீர்ப்பாக்கி முடிக்கிறேன்...
கவியின் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும், மற்றொரு கவியை ஊற்றி நிறைத்திருப்பதை காணமுடிகிறது!
ReplyDelete