Wednesday, April 11, 2012

உறங்காத இரவுகள் - 1

சூரியனே! உண்மையை சொல்
நீ பூமிக்கு தாயா? மாமியாரா?
இந்த வாட்டு வாட்டுகிறாய் கோடையாய்

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

என்  வீட்டுக் கொசுக்களுக்கு
வேலை இல்லாமல் போகிறது...
என் உறக்கத்தை திருடுவதில்
நீ முந்திக்கொண்டதால்...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

என்  கண்ணீர் கடிதத்தை
அவளுக்கு மொழிபெயர்க்கத்
தெரிவதே இல்லை...

 தெரிந்திருந்தால் சொல்லப்படும்
என்  காதல்
புரிந்திருக்குமல்லவா?

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

32 சூரியனை
ஒற்றைத் துளி நீர்
அனைத்துவிடுகிறது... கண்ணீர்

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.
உன் புன்னகையால்
தொடங்கப்பட்ட என் கவிதை
முடிக்கப்படுவது என்னவோ...
என் கண்ணீரின் முற்றுப் புள்ளிகளில் தான்

 +.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

அவள் இதழ்
குறள் வெண்பா...

அதன் ஒன்றன் விதியில்
எழுதப்படும் குறள்களே...

என்றன் உலகப் போதுமரையாச்சு...
+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

அந்த கடிகாரம் என் ஆயுளை
திருடிக்கொள்கிறது இரு கரங்களால்...

என்  பேனா
வெறும் நீலமை கொண்டே
என்னை வசியம் செய்கிறது...

அவள் விழி மறுத்த பிறகு
தமிழக  அரசே கொடுத்தும்
எனக்குள் 24 மணிநேர மின்தடை போல்...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

முதியோர் இல்லத்தில்
தாய் தந்தையை
பார்க்கப் போகும் ஒவ்வொரு முறையும்
மற(று)ந்(த்)து போகிறான்...

அவர்களின் கட்டிலை தட்டினை
தனக்கென்று எதிர்காலத்திற்கு
முன்பதிவு செய்துகொள்ள...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

வன்மம், கோபம், வஞ்சம், போதை, 
காமம், காதல், சுயநலம், தலைக்கனம் கலந்த

உலகின் கொடிய விசத்தை 
பருகும் கொசுக்களுக்குமட்டும்
எதுவுமே ஆவதில்லையே எப்படி??

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்