அடுத்தவன் மனைவியை
தொட்டால் கேட்டாய்
என்று சொல்லத்தானே
ராமயானத்தில் ராவணன்
பத்து தலை இருந்தும் செத்து வீழ்ந்தான்...
உலகம் அறிய எழுதியதை
உலகம் அறிந்த கணபதி
அறியவில்லையோ? அறிந்திருந்தால்,
ஒடிந்த அவனது தந்தம்
தந்திருக்குமா துச்சாதணனை?
சூதால் கவ்வப்பட்ட தர்மம்
கூர் பற்களில் உயிரிழக்கும்முன்
தப்பி வந்து சூதின் வேரறுக்கும்
என்று சொல்ல 18 நாள் போர் வேறு...
காக்க வேண்டிய கடவுள்
ஏற்படுத்திய அழிவுதானே அது...
கண்துடைப்பாய் நிலைநாட்டப்பட்ட நியாதி...
துச்சாதணனை கெட்டவனாக படைத்து
பின் நியதியை காக்கும் தன் நாடகத்திற்கு
பலி கொடுக்கும் கயமை தெய்வீகம்
என்று அழைக்க சொல்லும் மடமையோ?
ஒரு படைப்பில் தான் செய்த பிழையை
இன்னொரு படைப்பால் சரிசெய்து கொள்கிறாய்
ஆனால் அதற்காய் வீணாய்
படைப்பின் தர்மம் உன் தவறென்னும்
சூதின் வாயில் தானே இறந்து கிடக்கு?
பின்குறிப்பு - காயப்படுத்த எழுதியதல்ல... கடவுள் என்னும் பெயரில் சாயம் பூசப்பட்டிருக்கும் உண்மையை வெளி கொண்டு வர எழுதப்பட்டது...
No comments:
Post a Comment