திருமணத்தில் உங்களுக்கு அழகே
இது தாங்க என்று அன்று அம்மா
ஆசையாய் சொல்லிய மீசையை...
முத்தவேளையில் எனைக் குத்தும் என்பதற்காய்
வெட்டிக் கொன்றாயே...
அந்தக் கொலையில் உன்னுள்ளும்
தாய்மை உயிர்த்ததட...
90 மதிப்பெண் நான் எடுத்த போது
10 மதிப்பெண் எங்கே என்று நீ அரட்டியதை விட
என் மகன் 90 எடுத்தான் என்று
உன் கூட்டாளிகளிடம் பீற்றியது தான்
அதிகம் என்று நானறிந்தேன்...
நீயாய் நீச்சலடித்து வந்தால்
மேலே வா இல்லை உள்ளே போ
என்று நீ தூக்கி எரிந்தபோதும்...
என் பின்னாலேயே நீயும் உள்குதித்து
நான் தத்தளித்து நீந்த பழகியதை
நீ ரசித்ததை என்று நானறிந்தேன்...
கண்டபடி காகிதங்களில் கிறுக்கி
குப்பைக்கு பொய் கொண்டிருந்தது
இப்படிக் கவிதைகளானது
உன்னால் தானே என்று நானுணர்வேன்...
ராமானுஜம் என்றால்
இஸ்திரிக்கப்பட்ட உடை,
மாதம் ஐந்து இலக்க சம்பளம்,
கவிஞன் ஓவியன் என்று
தெரிந்த உலகத்திற்கு
அதன் பின்னால்
அழுக்கு உடை
அள்ளி சுமக்கும் மூட்டை
பள்ளி தாண்டாத சோலைமலை இருந்தான்
என்று எப்படி உணர்த்துவேன்...
நான் வெள்ளிக் கரண்டி
இல்லாமல் பிறந்த
சோலைமலையின் வாரிசு
ஆனால் எந்த வெள்ளிக் கரண்டியும்
தந்திருக்க முடியாது இந்த சுகமான வாழ்கையை...
இன்றும் நம் பெயர் என்பது
வெறும் வார்த்தை தான்
அவன் பெயர் பின் இல்லாமல்
அர்த்தம் அதற்கில்லை...
அவன் நமக்காய் இழந்தவைக்கு
இழப்பிடு ஈடு செய்ய முடியாது...
உழைத்து ஓய்ந்தவனுக்கு
கொஞ்சம் இளைப்பாறல் கொடுக்கலாம்...
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
#O#
தந்தையர் தினக் கவிதை - v 2011
#O#
தந்தையைப் போற்றும் தந்தையர் தினக்கவிதை அருமை ராமானுஜம்!நான் என் 5 வயதில் தந்தையை இழந்தவன்.தாயே எனக்குத் தந்தையுமானவள்!பாருங்கள்-http://chennaipithan.blogspot.com/2011/12/blog-post_09.html
ReplyDeleteநிச்சயம் படிக்கிறேன் அண்ணா :)
Delete