Saturday, June 2, 2012

குற்றுயிருடன் தமிழ்




 ஐஞ்சு வயதாகுது எருமைக்கு
இன்னும் "MOMMY" சொல்லத்
தெரியவில்லை என்ற உதடுகளில்
சாகடிக்கப்படும்  தமிழ்
"ம்மா அடிகாதம்மா சொல்றேன்"
என்ற  மழலையில்
இன்னும் குற்றுயிருடன்...

"Hey dude" "Dear" என்று
ஊரெல்லாம் தமிழை
சாகடித்து வீடு வரும் மகனை
செல்லம் என்று வருடும்
அன்னையின்  பாசத்தில்
இன்னும் குற்றுயிருடன்...


"Darling, I love you" என்று காதலிக்கையில்
சாகடிக்கப்படும் தமிழ்
தங்கமே என்றோ
தரிதிரமே என்றோ
திருமணத்திற்குப் பின்
இன்னும் குற்றுயிருடன்...

பிறந்த வீட்டில் கொடுமைபடுத்தப்பட்டு
புகுந்த வீடுகளில் போற்றப்படும்
ஒரே பெண் தமிழ் மட்டும் தான்...

 பின்குறிப்பு - முகப்புத்தகத்தில் தமிழ் வளர்ப்போம் என்ற பக்கத்தில் நடந்த ஒரு போட்டிக்காய் எழுதியது.

3 comments:

  1. ம்ம்ம் அருமையான கவிதை
    நல்ல கருத்தும் கூட நண்பா

    ReplyDelete
  2. பிறந்த வீட்டில் கொடுமைபடுத்தப்பட்டு
    புகுந்த வீடுகளில் போற்றப்படும்
    ஒரே பெண் தமிழ் மட்டும் தான்...

    தங்கமான தமிழ் ஆக்கம்.. பாராட்டுக்கள் !

    ReplyDelete
  3. Tamil ah Gowravikkum 'Gowrami' ku en vazhthukkal...

    *Tamil font not available. Mannikkavum.
    Tamil ai gowravitha kavidhai ku
    aangilathil paaraattu therivithdhukku varundhugiraen.

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்