Tuesday, June 5, 2012

கிறுக்கன் சொல்லியது


சொல்லப்பட்ட முதல் காதலுக்கு 
ஒப்புக்கொள்ளும் முன் 
நீ கேட்ட முதல் பரிசு 
உன்னை மறந்திட வேண்டுமென்பது 
கடைசி வரை அதை
கொடுக்க முடியாமலே போனதேனோ?
.
காதலை மறந்து
சந்தோசமாய் இரு, அன்று
நீ சொன்ன வாழ்த்தும்
சாபாமாய் கேட்டதேனோ?
.
ஆசையாய் வாங்கிவந்த பொம்மையை
பரிசாய் வாங்கிய பிள்ளை உடைத்தது போல்
உனக்காய் படைக்கப்பட்ட என்னுடைய இருதயம்
20 ஆண்டுகள் என்னிடம் பத்திரமாய் இருந்தது
காதலால் நீ உடைப்பதற்கோ?
.
நீ இல்லை தெரிந்தும்
உனதாய் தெரியும்
எல்லார் முகத்தையும்
இரண்டு முறை பார்ப்பது ஏனோ?
.
கோடையாதலால் 
தலையணை நனைக்கும் கண்ணீரை 
வியர்வை என்று சமாளித்துக் கொள்கிறேன்...
என்ன செய்யப்போகிறேன்
ஜூலை முதல்?

2 comments:

  1. அம்மாடி, எவ்வளவு வலி! அருமையான கவிதை அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. இந்த வார்த்தைகளாலும் முழுதாய் சொல்ல முடியாத சொல்லி முடியாத வலிகள் :(

      Delete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்