அச்சோ! எறும்பு கடிச்சுருச்சா?
செல்லத்துக்கு பசிசுருச்சா?
என்று தாய்க்கு மட்டும்
உண்மை அர்த்தம் புரியும்
மழலைக் கண்ணீர்...
கருவிழி வாயிலிருக்கும்
தண்ணீர் பற்களால் சிரித்து
பெரும் மகிழ்வை சொல்லும்
ஆனந்தக் கண்ணீர்...
அவன் பெற்றோரால்முடியாததையும்
முடிக்க வைக்கும் காதலியின் கண்ணீர்...
நெடுந்தொடருக்கு தொடங்கி
படும் துயருக்கும் கொட்டும்...
செல்ல நாயின் மரணம் தொட்டு
உடையும் காதல் வரை சொட்டும்
இளகிய பெண் பூக்களின் கண்ணீர்.
இரவுகளின் தனிமைகளில்
இருதயம் முழுக்க ஒட்டி நிற்கும்
அவள் நினைவை கழுவி போக்க
நினைத்து தோற்கும் ஒருதலைக் கண்ணீர்..
மத மாதம் மணி ஆர்டரில் வரும்
"மகனின் அன்புள்ள அம்மாவிற்கு"
கடிதத்தில் பணக்கற்றைகளில்
எங்காவது மகன் அன்பு ஒளிந்திருக்குமா?
தேடி எங்கும் முதியோர் இல்லக் கண்ணீர்...
திரும்ப வருவது உத்தேசமில்லை
வந்தாலும்பார்க்கப் போவதுமில்லை
இருந்தும் எல்லோரும் தயக்கமின்றி
எழுதிப் போகும் மொய்
ஒப்பாரிக் கண்ணீர்...
வெறும்உப்பு நீர்...
ஆனால் மனிதம் அறிந்த
ஒரே பயங்கர ஆயுதம் ... கண்ணீர்...
கண்ணீர் ஒரு வென்நீர்
ReplyDelete