Thursday, December 8, 2011

தீபத் திருநாள்


கார்த்திகை
அறிவியலையே
வியக்க வைக்கும் நாள்

மண்ணின் மீன்கள்...
இதில் மயங்கும் 
விண்ணின்மீன்கள்

~*~*~*~*~*~*~*~*~

மின்சார மலர் சூடி
சுற்றி வரும் பூமிப் பெண்ணை
நிலா முகிலிடுக்கு வழி
பார்த்து ரசிக்கும்
கார்த்திகை இரவு

*~*~*~*~*~*~*~*~*~*

இன்று ஒரு நாள்
சூரியன் பூமியிடம்
ஒளிக் கடன் கேட்கும்

~*~*~*~*~*~*~*~*~

ஐயோ!
பூமியின் தேவதைகளே
இன்று ஒரு சேர சிரித்தீரோ?

~*~*~*~*~*~*~*~*~


ஒரு நாட்டையே
விழாக் கோலம்
சுட்டி விட்டவன்

இருட்டிக் கிடந்த
கோவில் கருவறைக்கே
ஒளி சேர்த்தவன்

ஏனோ இவன்
வாழ்க்கை இன்னும்
இருட்டியேக் கிடக்கிறது
தெருவோர விற்பனைகளில்

ஒளி ஏற்றும்
அகல் வியாபாரம் 
இருட்டிப் போனது
மெழுகுகளின் 
வியாபாரத் தீயில்

பரந்து விரிந்த
மனம் வேண்டும் 
பாடம் சொன்னது அகல்

நிமிர்ந்த நெஞ்சம்
வேண்டும் 
சொன்னது தீபம்

இயற்கையின் வாசம்தான்
சுவாசம் சேர வேண்டும்
(மின்சாரம் போல்)
பொய்க்காத வெளிச்சம் வேண்டும்
வேதம் சொன்னது
கார்த்திகை தினம்

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

தீபத்தின் ஒளி வெள்ளம்
உங்கள் புன்னகை கடல்
சேரட்டும் ...

தீபத் திருநாள்
நல் வாழ்த்துக்களுடன் GowRami



5 comments:

  1. தீப திருநாள் வாழ்த்துக்கள் நன்பா
    கார்த்திகை கவிதைகள் + சிந்தனைகள் அருமை...

    ReplyDelete
  2. நன்று.. தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. மண்ணின் மீன்கள்...
    இதில் மயங்கும்
    விண்ணின்மீன்கள்

    அருமை. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. ஒளிவெள்ளம் புவிப்பந்தில்..
    ஒளிரவிட்ட மாந்தருக்கு..
    ஒளிந்திருக்கும் கலைஞனின்
    ஒளியற்ற வாழ்வுநிலை.. புரிந்தால்..
    அது அவனுக்கு ஒளித்திருநாள்..!

    அழகான வரிகளால்
    ஆட்கொண்டாய் மைந்தனே..
    வாழ்க..!

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்