Wednesday, December 7, 2011

படியாமை


2 அடிக் குறள் போதும்
நிச்சயமாய் தேர்வில் வரும்...
ஆனால் குறளின் ஒரு சீர் கூட
ஏறவில்லை இவன் நாவில்

அதிகம் ஒன்றும் கேட்கவில்லை
5 கூட்டல் 6 எவ்வளவு!
அவ்வளவு தான்
அவன் மதிய உணவில்
பாதி கேட்டது போல் முழித்தான்...
ஆறுமுறை விரல் கொண்டு எண்ணி
ஏழாம் முறை சொன்னான் 9 
என்று அன்று

ஆனால் இன்று!

10 அடி தூர சுவர் நிறைய
எழுதி இருக்கும் உணவு ரகம்
குறை இல்லாமல் சொல்கிறான்
ஹோட்டல்களில்

ஐந்து மேசை
மேசைக்கு நான்காய்
20 நபர்கள் ஆர்டர்
தவறாமல், ரசிது போடுகிறான்

கணினி தோற்றுப் போகும் 
கணிதத்தில் தோற்று
இன்று மேசை துடைக்க
வந்தவனின் கணிதத்தில்

இந்த பசி துரத்தும் ஓட்டத்தில்
தன்னால் நியாபக சக்தி ஏறுது
கணிதம் வசமாகுது
மூடன் இவனுக்கும்

வாழ்கை சுமை
மேலும்
இதில் படியாமை
என்னும் படிக்கல்
சேராமை நன்று!




2 comments:

  1. குழந்தை தொழிலாளி உருவாக வருமையே காரணம்...
    "படியாமை"
    தங்கள் சொல்லாண்மை அருமை

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்