Monday, December 12, 2011

பாரதி


முருக்கிய மீசையில்
கசிந்தது தீந்தமிழ்

வாளுக்கும் வேலுக்கும்
அஞ்சாத வெள்ளை நரிக்கு
ஐரோப்பா வழி சொன்ன
அன்னைத் தமிழ்

இந்திரப் பிரசத்து
மருமகள் பாஞ்சாலியும்
தமிழில் சபதமிட்டால்
இவன் பேனா வழி

சிந்து தொட்டு...
தென் பெருனை, காவிரி வரை
நதி நீர் இணைந்தது
தேசம் தழைத்தது
இவன் கவிதைகளில்

புதுமைப் பெண்
சாதி அழிவு
தமிழன்னை பேசிய
பாமரத் தமிழ்
இப்படி எழுத்தால்
இயல்பை புரட்டிப் போட்டவன்
இவனன்றோ! ஒராள் படை
வாலெதற்கு...இவன் சொல்லிருக்க

இங்கு இவனது
நாளிதழ் அச்சிட்ட ஓசை
இங்கிலாந்து நடுங்கியது
ஊமை பேனாவும்
சுதந்திர மொழி பேசியது...
பெண்ணை அடக்கிய கைகள்
முறிந்து போனது

தமிழ் பேசிய
ஆரிய வேதம் இவன்
இவனைப் பார்த்து
சமஸ்கிருதமும் தமிழ்ப்பால்
கொண்டது வஞ்சம்

பிரங்கியை நோக்கியும்
அச்சமின்றி மார் நிமிர்த்தலாம்
ஆச்சமில்லை என்று உச்சரித்துப் பார்
காதுக்குள் தேனொழுகும்
தமிழ் சொல்லிக் கேள்
ஆண்மகன் வாழலாம்
வாழ்க்கையாம் பெண்ணை வாழ விடு
சாதிகள் தொலையும்
காலை படி
கல்வித் தொல்லையும் சுகமே

இத்தனைக் கண்டானே
இவனைத் தமிழ் ஐன்ஸ்டீன்
என்பதா?
ஐன்ஸ்டீனை ஜெர்மன் பாரதி
என்பாதா?

2 comments:

  1. உன் வரிகள் என் உள்ளத்திலுள்ள பாரதியை, ஒரு நிமிடம் கண்முன்னே உயிர்ப்பித்தது தோழா:)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்