Sunday, December 18, 2011

என் 18 வயதுக் கவிதை


மகரகேதனன்மன்மதன் எனை வதைக்க
நான் முகனைபிரம்மன் நாட
அலரவனும்பிரம்மன் படைக்கிறான்
அழகி ஒருத்தியை

கல்லறையில் பதுங்கிய
கவிஞர்களின் கற்பனைகளை
கருவறையில் பிறக்கவைத்து
உந்தன் உருவம் வரைந்தானோ?

காற்றில் கலந்துவிட்ட
இசைஞர்களின் ஸ்வரங்களை
ஒன்றுதிரட்டி
உந்தன் குரலில் குவித்தானோ?

உலகின் ஆடல்களின்
அசைவுகள்சிலகடைந்தெடுத்து
உந்தன்  நடையழகாய்
உலவ விட்டானோ?

மழை மேகம் கடத்திவந்து
மிருதுவூட்டி ஜொலிப்பூட்டி
உந்தன் குழலாய் செய்தானோ?

 நட்சத்திரம் இரண்டை
வானில் பிரித்தேடுத்து
உந்தன் முகத்தில்
கண்ணெனப் பதித்தானோ?

மின்சாரமின்றி மிளிரும்
கச்சோதம்மின்மினி தான் பிடித்து
திலகமென நெற்றிதனில்
விட்டானோ?

முளரியின்தாமரை இதழ்களில்
சிறிது இதம் கூட்டி
உந்தன் இமைகளை 
இழைத்தானோ?

எந்தன்  இதழ்களின்
நகலெடுத்து
எனை சேரும்
உந்தன் இதழை
நகைக்க வைத்தானோ?

அமிழ்தம் சிறிதெடுத்து
மதுரம்தேன் தான் சேர்த்து
வெளிலிட்டுமத்து கடைந்தெடுத்து
உந்தன் வாயில் உமிழவிட்டானோ?

நீள் மூங்கில் ஒன்றை
இரு தூளை புல்லாங்குழலாக்கி
உந்தன் நாசியாக்கி
எந்தன் சுவாசம் பிரித்தெடுத்து
உனக்கு சுவாசம் கொடுத்தானோ?

இரட்டை பிறப்பாம் நிலவில்
ஒன்றை பிரித்து
மாசழித்து பொடியெடுத்து
உந்தன் வாயில்
புன்னகைக்கும் இரசனமெனபல்
படைத்தானோ?

கால் அடியில்
நீள் வாக்கில்
முத்தொன்று படைக்க
சிப்பிக்கு கட்டளையிட்டு
உந்தன் கழுத்தாக கடைந்தானோ?

மழைத்துளிகளை மின்னலில்
கோர்த்தெடுத்து
உந்தன் கழுத்தில்
மின்னிட விட்டானோ?

ராட்சஸ வாழைத்தண்டு படைத்தெடுத்து
விஸ்வகர்மா செதுக்கித் தர
எழு வபுவாய்உடல் நிறுத்தி
எந்தன்  துடிப்பில் துளியை
அதில் பரப்பி விட்டானோ?

வாயுவினை இருகுழலில்
சிறை பிடித்து உந்தன்
பொற்பாதம் படைத்தானோ?

ஆலங்கட்டிகள் ஆய்ந்தெடுத்து
கொலுசாய் கோர்த்தெடுத்து
உந்தன் கால்களில் கட்டிவிட்டானோ?

இயற்கையை நூர்த்து நூலெடுத்து
வானவில்லில் சாயமெடுத்து
உனக்கென  துகில் நெய்தான்

இப்படி கலம்பகபதினெட்டு
ஆண்டுகளுக்கு முன்னாள்
எனக்கென பிறந்து
கண்முன்னே கலமிரங்கினாய் நீ
காதல் கழுவினால் ஏற்றினாய் என்னை


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்