புதையல்கள்
இலக்கியம் சொன்ன
ஏழு மலைகள், ஏழு கடல்கள்
தாண்டி புதைந்து கிடந்தாலும்
தூரமாய் தெரியாது...
கணிப்பொறி ஊளையிட
கீபோர்டு சல சலக்க
வியாபரா இருள் சூழ்ந்த
விஞ்ஞானக் காட்டுக்குள்
காதலியை பிரிந்து
2 அடி தூரம்
தள்ளி அமர்ந்திருந்தாலும்
தூரமாய்த் தெரியும்
இந்தத் தூரங்கள் எல்லாம்
துகள்கள் ஆனது
என் இமை அசைவும்
அவள் அறியச் செய்தது
அலுவலக அளவளாவி
(office communicator)
விஞ்ஞானியின்
அளப்பரியா கண்டு பிடிப்பு
அனுவைப் பிளந்ததல்ல
கண்டுபிடித்த கைப்பேசி
அளவளாவி மென்பொருள் வழியே
காதலை இணைத்தது தான்
அளவளாவி - எனக்கு புதிய வார்த்தை
ReplyDelete