Sunday, December 11, 2011

விடலைப் பருவம்


அறியாத வயதின்
எல்லை கடந்து...
அறிவின் எல்லை வரை
அறிய வந்த வயது...

பயமறியா தவறிலையா
இளங் கன்று வயதிது

பூக்கள் கனியாகும் பருவம்
கதிர்கள் முதிர்கின்ற தருணம்

பதின்ம பருவம்
நொடிக்கொரு காதலென்று
பொய்கள் சொல்லி
வலிகள் தந்த வயது
புரியும் வயதில்
காதல் புதிருக்கு
விடைகள் தந்தது...
காதல் ஒற்றை உயிரேன்றது

ஹார்மோன்களின் கலகம்
துணையாய் காதல்
ஒன்று கேட்டு
கண்ணிமைகள் அழையும்
எங்கோ பார்த்த முகம்
என்று புலம்பும்
இதயம் உள்ளே உறுத்தும்
இவள் உன் துணை
என்று சொல்லி
காதல் மலரும் அழகான பருவம்


வள்ளுவனுக்குக் கூட
இருவரி தேவைப் பட்டது
நட்பே உனை சொல்ல
மௌனங்கள் கொண்டு
இரு இருதய தூரம் கடக்கும்
நட்பின் வயது...

பூக்களுக்கு
மகரந்தம் பாரமா?
பறவைக்கு
இறகுகள் பாரமா?
மனிதத்துக்கு
குடும்பம் பாரமோ?
தாயே! உயிர் தகப்பனே! உறவே!
உன் அருமை அறிந்த வயது

பிழையான தமிழும்
அழகான கவிதையாகும் வயது
காதல் வாசம் தாண்டி
பெண்மை பூவில் நட்புத் தேனும்
பருகும் வயது
உலகை அழகாய் பார்க்கும் வயது
நாட்டை பற்றிக் கூட
மூளை நரம்பில் சிந்தை பாயும் வயது

மயூர மென்மையாய்
மேவாயில் கார்மேக மீசையும்
இடியின் இன்னலாய்
தேச இடைஞ்சலை துடைக்கத்
துடிக்கும் வயது...
பயமரியாக் கன்று நீ
என்று உன்னை உலகம்
கோழையாக்கும் வயது
வாயில்லாப் பிள்ளை
என்று சொல்லி
சுயநலமும் பிறழ்ந்த அறமும்
விதைபடும் வயது

இந்த வயது
வோட்டு மையினால்
நாட்டை திருத்தி எழுதும் வயது
குட்டி மனதினுள்
கொள்ளை நல்ல எண்ணம்
அள்ளிக் கொள்ளும் வயது


நீயும் அழகாவாய்
உன்னால் உலகம் அழகாகும்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்