ஊருக்காய் உலகுக்காய்
முள்ளை ஏந்திக்கொள்ள
பூ பிறந்த தினம்
தெய்வம் மனிதனாய்
பிறந்த தினம்
அன்பு ஒன்றே அழியாதது
என்று புறியாத
மனிதனுக்கு சொல்ல
கடவுளுக்கே ஆயிரம்
பிறப்பு தேவைப்பட்டது
அதில் ஒரு பிறப்பு
எழுதப்பட்ட நாள்
மண்ணுக்கு சூரியன் வந்தான்
அவன் இருப்பிடத்திருக்கு
விண்மீன் வழி சொன்னான்
கிறிஸ்துமஸ் தாத்தாவின்
பரிசுக்காகவே
நல்லெண்ணம் பூத்தது
பூக்களின் நெஞ்சினில்
அவர் வெண் தாடி போல்
பொழிந்திடும் மார்கழிப் பனிபோல்
உள்ளம் வெளுத்தது
மகிழ்ச்சி செழித்தது
நான் வாழ்த்தையிலே
கிறிஸ்தவன் இதழ்கள்
சிரிக்கத்தான் செய்தது
கிறிஸ்த்தவன் கொடுத்த
கேக்கும் எங்கள்
தொண்டைக் குழிக்குள்
இனிக்கத்தான் செய்தது
மதங்கள் பல
மனங்கள் பல
அனால் உள்
எழுத முற்படுவது
அன்பு ஒன்றுதான்
எங்கும் விழைவது
மகிழ்வு ஒன்றுதான்
உடலால் பிரிந்துக்
கிடக்கும் ஓர் உயிர்களே
இங்கு சந்தோசக் கூத்தாடுங்கள்
எல்லோருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
தலைப்பிலேயே மனம் குளிர்கிறது
ReplyDelete