Sunday, September 16, 2012

இன்னும் எதற்கு சம்பாதிக்கிறேன்

இன்னும் எதற்காக
என் இந்த ஓட்டம்

திண்டிவனம்  தேடியும்
சோழிங்கநல்லூர் சலித்தும்
மூழ்க்காத மடிப்பாக்க மிச்சத்திலும்
நான் தேடும் "Sweet Home"
எட்டா லட்சங்களாய் கிடக்கிறது
என் கை இருக்கும் சொச்சங்களோ
செல்லாத காகிதமானது

இந்தியா வரும் எண்ணெய்
பேரல்கள் மட்டும் விலை அதிகமாம் 
முதலாளிகள் கோடிஸ்வரராயிருந்தும்
கம்பனிகள் நஷ்டத்திலாம்
பெட்ரோலும் சொந்தக்கரும்
கனவான போதும் சிரிக்கிறேன்
இன்னும்  சொந்தக் காலால்
நடப்பது  இலவசமாக இருப்பதால்

காய்கறி பலசரக்கு
ஆடை அடிச்சு போடும் வரி
தண்ணீர் வீட்டு வாடகை
பாலூற்றிடும் பால் தங்க விலை
என  எல்லாம் போட்டி போட்டு எகிறுது...
எ(ன்)ங்கள் சம்பளத்தைத் தவிர

அனாவசியம்  என்றிருந்ததெல்லாம்
அவசியம் ஆகிப்போனது தேவையால்
மனிதனின் ஆசை என்றிருந்ததெல்லாம்
பேராசை ஆகிப்போனது விலையால்

மாடாய் என்ன?
பேயாய்  உழைத்தும் கூட
professional tax, pf போக
எஞ்சிய சம்பாத்தியம்
வீட்டு லோன் டியூவுக்கே தட்டி நிற்குது

செல்லாத காசை சம்பாதிக்கிறேன்
சொல்லாத ஆசைசுமந்து திரிகிறேன்
இன்னும் எதற்காக
என் இந்த ஓட்டம்...

2 comments:

  1. சிறுகச் சிறுகச் சேமித்து தான் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும், இல்லையா அண்ணா?

    இத்தனை நீளமான ஓட்டம்,
    இரு கையளவு வயிற்றுக்குத்தான்!
    :( :(

    ReplyDelete
    Replies
    1. உன் சேமிப்பு எட்டடி பாய்கையில் விலை.. பல்லாயிரம் அடி தாண்டி நிற்கிறது :(

      Delete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்