அன்றொரு நாள்
ஜெனிபர் சொல்லி போனாள்
அவள் அவனை காதலிப்பாதாய்
நிலா சொல்லி போனாள்
அவன் தான் பணக்காரன் என்று
செல்வி உதறிப்போனாள்
முறை மாமன் அரிவாள் முறைக்குதென்று
அதில் எதுவுமே வலிக்கவேயில்லை
பின்னொரு நாள்
ஸ்வேதா தூக்கி எறிந்தாள்
என்னை விட அவன் அழகென்று
பிரியா இருதயம் உடைத்தாள்
நாம் வேறு சாதி என்று
பாத்திமா முறைத்து போனாள்
நாங்கள் வேறு மதம் என்பதால்
இன்னும் பலக்காரணங்கள் பலரால்
சொல்லி என் காதல் சாகடிக்கப்பட்டது
அதில் எதுவுமே வலிக்கவேயில்லை
உன்னிடம் கூட காதல் சொல்ல
பயமே இல்லை ... இதை தாண்டி
நீ என்ன சொல்லிவிடுவாய்
சொன்னாலும்
காதலிழந்தவர் எல்லொரும் அதிகம்சொல்லும் பொய்யைத்தான்
நானும் சொல்லுவேன்...
எனக்கு வலிக்கவே இல்லை...
பின்குறிப்பு -
1. இந்த கவிதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே
2. பொண்ணுங்க பெயர் யோசிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. எனவேதான் ஆறு காரணம்
No comments:
Post a Comment