உலக சந்தையில்
உடலெல்லாம் விற்பனைக்கு
.
திருமண மண்டிக்குள்
நீ நுழைந்தால்
100 பவுன் தள்ளுபடியோடு
பூக்கள் விற்கக் கிடக்கும்
.
கல்லூரி கோடோவ்னில்
தினம் நீ பார்த்தால்
விற்று தீரும் மூளைகள்...
நல்ல இளசை புது புது தினுசாய்
.
தனியாய் விற்பனைக்கென்று
கடைகள் தேவை இல்லை
தெருவெல்லாம் விலை பொருள்
தன்னை தானே விற்க
விளம்பரம் செய்து திரியும்
.
ஒரு இஞ்சுக்கு முகப்பூச்சு
காரக்குழம்பு கொட்டிய ஹேர்ஸ்டைலு
ஒன்னே முக்கால் அடி செருப்பு
மறைக்கப்படவேண்டியதேல்லாம் காட்சிக்கு
நுனி நாக்கில் ஆங்கிலம்
அவனி(ளி)டம் இல்லாத அது என்னிடம் இருக்கு
என்று எல்லோரும்
தன்னை தானே விளம்பரம் செய்வது
முற்றிய கத்திரிக்காயையும்
சந்தையில் விற்றிட முயலும் முயற்சிதானே
.
விற்று தீருங்கள் உங்களை நீங்களே
No comments:
Post a Comment