130 likeகளுடன் அசிங்காமாய் இருந்த
அவள்களின் புகைப்படம் கீழ்
nice cute என்றிருந்ததெல்லாம்
பொய் என்று சொல்லாமல் வந்திருக்கிறேன்
அவள்களிடம் நல்லவனாக பேசி
தூரத்தில் பார்க்கையில்
தொங்குது குலுங்குது என
வாய்கூசத நச்சுபாம்பை பார்த்தும்
ஒன்றும் செய்யாமல் வந்திருக்கிறேன்
இதுவே அமெரிக்காவா இருந்தா என்றுவிட்டு
பொது இடத்தில் புகைத்தவர்களை
காலியான பிஸ்கட் பாக்கெட்களை
ரோட்டிலேயே எறிந்தவர்களை
பார்த்தும் பொருத்திருந்திருக்கிறேன்
நான்கு வருடங்கள்
kozhiyin century dhoniyin helecopter
என்று புலம்பிவிட்டு; பணத்தை
அவன் பாதத்தில் குவித்துவிட்டு
நான்கில் ஒரு வருடம் மட்டும்
இந்தியா தத்தி மச்சி
ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் இல்லை
என்றவரோடு தலை ஆட்டியதுண்டு
என்னிடம் லஞ்சம் வாங்குபவன்
என்னை அதட்டி கேட்கிறான்?
தரமில்லாததை தந்துவிட்டு
தயக்கமின்றி விலை நிர்னையிக்கிறான்
தெருவில் குப்பை போடுபவன்
தைரியமாய் போடுகிறான்
விவாசாயி விளைவித்ததை
அவனுக்கே அதிக விலைக்கு விற்கிறான்
ஒட்டு கேட்க மட்டும்என் வீடு தேடி வருகிறான்
தப்பு செய்பவன் எல்லாம்
தைரியமாக திரிகிறான் திரிய விடுகிறேன்
இப்போ சொல்லுங்க
நான்(ம்) கோழைதானே?
அண்ணா, "கோழை" தானே...
ReplyDeleteஆதங்கம் எல்லாம் கொட்டிவிட்டீர்கள்.
மாற்றிட்டேன்... நன்றி :)
DeleteYou Like a great 👍
ReplyDelete