நோய் தாயை நசுக்க
இளையாள் கணவன்
வரதட்சனை என யாசிக்க
சிகரெட்டு சூடு இம்சிக்க
எதோ ஒரு காரணம்
எத்தனையோ கட்டிலில்
இரையாக்கிய அவளின் பெயர்
தே***** என்றால்
அறிப்பெடுத்த பொழுதுகளில்
சொறிய தேடும் கையாய்
ஆ(பெண்)ணை ஆ(பெண்)ணும் தேடி
காதல் நட்பென்ற புதர் மறையும்
அசிங்கங்கள் என்னவென்பது?
=O=O=
கண்ணகி பேத்திகளே
மார் மறைக்க வேண்டிய துப்பட்டாவை
கழுத்தில் சுற்றி வந்துவிட்டு
குனிகையில் நிமிர்கையில்
முன்னிருப்பவனை முறைப்பதிலில்லை
உங்கள் கற்பு
ஆண்களின் கண்
காய்ந்து போன மாடுதான்
ஆனால் மலம் தின்னாது என்றும்....
=O=O=
அனுபவிக்க மட்டுமல்ல,
இளமை அனுபவம் சொல்லவும்
சம்பளத்திற்கு மட்டுமல்ல,
கொஞ்சம் வேலை செய்யவும்
கால் நனைக்க மட்டுமல்ல,
கடற்கரைகள் மனம் கழுவவும்
ஆனால்,
அதை அதை
அங்கங்கு செய்வதும் இல்லை
செய்யவிடுவதும் இல்லை
காதலித்து மட்டும் தான் தொலைகிறார்கள்
காதலிப்பவர்களை கூட மன்னித்திடலாம்
காதல் என்று சொல்லிவிட்டு
சண்டை இடுவது
சேட்டை செய்வது
அடுத்தவன் வயிற்றில் நெருபிடுவதுமாய்...
பின்குறிப்பு :
இவைகள்
முகர்ந்து பார்க்கப்பட்ட
அசிங்கத்தின் வாசம் அல்ல
நம் சுவாசத்தை
இம்சை செய்யும்வீச்சம்
இது சரியா தான் எழுதிருக்கிங்க அண்ணா. நான் சொன்னது இது போல இருக்கிற பதிவுகள் இல்ல.
ReplyDelete