Saturday, April 28, 2012

என் காதல் ராமாயானம்


சீதை  அவள் பார்வையாலே
காதல்  நாணேற்றுகிறாள் 
என்  இருதய தனுசு வளைத்து...
கண்களால்  மாலைமாற்றி 
இருதயங்களுக்குள் சுயம்வரம்...

அவள் கண்கள் என்னும் 
கைகேயி வாங்கி வைத்த வரமோ?
இந்த  ராமனுக்கு காதல் வனவாசம்...

பிரிவு என்னும் சூர்பனகை
ராமனைத் தழுவிக்கொள்ள
ஆவல்  கொண்டாள்...
அவள்காதல் என்னும் லட்சுமணன்
கூர்வாளிடம் மூக்கறுபட்டு
பிரிப்பேன்  என்று சூளுரைத்தாள்

கைகள்  கொண்டு
மாயமாய் ஓடும் கால மானை
பிடித்துப் பார்க்க சீதை ஆசைபட
ஓடி மறைந்த காலம்  சூற்பனகையின்
சபதம் நிறைவேற்றியது...

சமூகம் என்னும் ராவணன்
சாதி என்னும் விமானத்தில்
கடத்திப் போனான் என் சீதையை
என் கண்ணீர் சடாயுவின் இறகு வெட்டிப்போட்டு...

இங்கே ராமன்
தனிமை என்னும் அசோகவனத்தில்
கவிதை என்னும் அரக்கி சூழ...

எந்தக் கனையாளியும்
அவளுக்கு என்னை
அடையாளம் காட்டவில்லை
வாலில் தீ மூட்டி
என்னை மீட்டுப் போக
அனுமனும் இன்னும் வந்துசேரவில்லை

சமூகம் என்னும் ராவணனிடம்
மயங்கிப்போனலோ தெரியவில்லை
என்னை மறதி என்னும் தீயில் இறங்கச் சொல்கிறாள்...

ராவணனிடம் கடன் வாங்கி
வார்த்தை கணை அவள் வீச...
ஆயிரம் தலை கொண்ட என் காதல்
ஒவ்வொன்றாய் மடிகிறது...
மறக்க  மட்டும் முடியவில்லை...

என் இருதயத்தை
களவாடிய திருடி இவள் தான்...
ஏனோ, வால்மீகி நானாகி
என் காதலை இதிகாசமாக்குகிறேன்...


5 comments:

  1. Sooper na! "endhak kanaiyaaliyum avalukku ennai adayaalam kaattavillai" awesome

    ReplyDelete
  2. அருமை நன்பா,மொத்த ராமாயணத்தையும் இருவருக்குள் அடக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன முயற்சி :)

      Delete
  3. நவீன இராமாயண்ம்! நன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்