Thursday, April 28, 2011
Wednesday, April 27, 2011
Tuesday, April 26, 2011
கற்பனை பூ வந்த உண்மை வண்டு
இவைகள் கற்பனைகளும் அல்ல காயப்படுத்த எழுதியதும் அல்ல
சிந்தை சிலிர்க்க சிந்தும் சிந்தனைச் சாரல்
இவை பலரை காயப்படுத்தலாம்
உண்மையில் உள்ளத்தின் உண்மையை பேசுபவனே
உதட்டில் உண்மை கொண்டவன்
இதோ என் இதயம் இயம்பும் உண்மைகள்
இதையும் தாண்டி காயம்
ஆழ் சென்றால் மன்னிப்பை வேண்டுகிறேன்
இதோ அறிவார்ந்த ஆண் மகனே!
உனக்காய் ஒரு கேள்வி...
ஆழி அமைதி பெண் மனதில்
அமிழ்ந்துப்போன வார்த்தைகள்
உன் அகராதியில் பெண் என்றால்
காதல் என்ற நம்பிக்கையில்
நீ மீறும் வரம்புகளுக்கு வழிவிட
இறுதியில் தோற்றுப் போய்
தூக்குப் போடும் அனாமத்து உயிரோ?
நீ நேரடியாய் பலி வாங்குவது
ஓர் உயிர்
சமுகத்தில் ஆண்மகன் மேல்
அழியா தீம் பெயர் உருவாக்கி
பலி இடுவது
எண்ணி அடங்கா உயிர்
காலனிடம் சவாலிட்ட
சாவித்திரியின் வாரிசுகளே!
உங்களிடம் சவாலிடும் கேள்வி இதோ
அடங்கா ஆண்மகனின் ஆழ் மனதில்
அடங்கிப் போன வார்த்தைகள்
உண்மையில்
காதலை நீங்கள் வெறுப்பது எதனால்?
பெற்றோரின் மேல் கொண்ட மதிப்பாலோ
நல்லவன் கிடைக்காத வெறுப்பாலோ
உண்மை இதுவகத் தான்
இருந்திட வேண்டும்
மூச்சு முட்டும் அளவில் பணம்
இமைக்கின்ற ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு நாட்டுப் பயணம்
இப்படி வாழ்க்கைத் தேடி தரும்
பெற்றோரின் தேர்வை தகர்த்தெறிந்து
உயிர் உருகும் தெய்விகம்
என்று வறுமையின் வாசத்தில்
காதல் வசனம் பேச
விருப்பம் இல்லையோ?
இமைக்கின்ற ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு நாட்டுப் பயணம்
இப்படி வாழ்க்கைத் தேடி தரும்
பெற்றோரின் தேர்வை தகர்த்தெறிந்து
உயிர் உருகும் தெய்விகம்
என்று வறுமையின் வாசத்தில்
காதல் வசனம் பேச
விருப்பம் இல்லையோ?
மன்னிப்புடன் பதிக்கிறேன்
Sunday, April 24, 2011
Saturday, April 23, 2011
மேடை ஏறிய என் கவி
முதல் முறை மேடை ஏறிய என் கவி
சகதி கம்பளம் தான் மிதித்து சாரல் பூ தான் தூவ
நடந்த mepco's 27th college day
நடந்த mepco's 27th college day
Sunday, April 17, 2011
Saturday, April 16, 2011
Bye Bye MEPCO
ஏறத்தாள 580
விரல்கள் என்
வெற்றிக்காய் போராடும்
580 இருதயம்
துடிக்கும்
நான் ஒருவன் உயிர்வாழ
நினைவுகள்
sight அடிக்காத ஆணின் கண்
ஓரவிழி பாரா பெண்
(இரண்டையும் பலர் பல விதத்தில் பொருட் படுத்தலாம்)
கவிகள் சுமக்கா கல்லூரி மேசை
இவைகள் தான் உலகில்
பெரும் பாவிகள் பட்டியலின்
முதாலாமவர்கள்
என்னை அழகாய் மட்டுமே
காட்டத் தெரிந்த
தோழனின் சட்டைகள்
ஓசை வாராமல் பேச முடியுமா?
இதழ்கள் அசையாமல் வார்த்தை பிறக்குமா?
இவைகள் என் தோழிகளின்
தனி திறமைகள்
ரகசிய சிறை வைத்த
குற்றத்திற்காக
கத்தி அம்பலப்படுத்திய
தோழியின் கைப்பேசி
நாங்கள் வருங்கால
isro விஞ்ஞானிகள்.
இதோ சான்றாய் பரந்த
காகித ராக்கெட்கள்
உண்மை நேசத்திற்கு
ஆண் பெண் எல்லை இல்லை
உண்மை காண வைத்த
infy campus connect
மன்னிப்புக் கடிதத்தின்
நுனி பிடித்து
உயிர் உசலாடிய
தாத்தா வகுப்பு
வருகை பதிவேடு
வருகை பதிவேடும் 50 ரூபாயும்
சடுகுடு ஆடிய
செமெஸ்டரின் கடைசி நிமிடங்கள்
49 க்கும் 50 க்கும்
இடைப்பட்டதே உலகில் இருக்கும்
மிக நீண்ட...ஆபத்தான பாதை
எவன் அழைத்தான்
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வருகிறது
பரிட்சை முதல் நாள் தூக்கம்
என்னை சோம்பேறி ஆக்கிய காலைக் கடிகாரம்
அலுப்பில் கொஞ்சம் சோம்பேறி ஆனா பாடவேளைக் கடிகாரம்
பெரும் பச்சோந்திகள்
புது புது கரைசல்கள்...வேதியியல் ஆராய்சிகள்
விஞ்ஞானிகளை மிஞ்ச வைத்த
பிறந்தநாள் ஆயத்தங்கள்
வருடத்திற்கு இரண்டு முன்று
பிறந்தநாள் கேட்க்க வைக்கும்
சந்தோசத் திண்டாட்டங்கள்(மன்னிக்கவும் கொண்டாட்டங்கள்)
ஆனந்த மழையில் நனைய வைத்த
மாலை விடுதி விருந்தும்
காய வைத்த warden enquiryயும்
உரைய வைத்த கோடை உலாவும்
நடுங்க வைத்த அபராதமும்
Placement போருக்கு
முன் நாள் POவின் வீரவுரையும்
11 மணி ஐரோப்பா வரலாறும்
8 மணி வரை நீளும் மாலை உரையாடலும்
முதல் முறை திறமையை
அடையாளம் கண்டு
மறுமுறை ஏமாற்றும்
அரசியல் சொன்ன festember
பசி ருசி அறியாது
சொல்லித் தந்த விடுதி உணவு
அழையா விருந்தாளி "கண்ணீர்"
கெடுத்த பிரியாவிடை விருந்து
Dedicated to Mepco Friends, those who fill the pages of my life as smiles, tears, teases and sweet memories...I love u friends...
I won't miss U...Bcoz b touch with tis idiot
Wednesday, April 13, 2011
நெல்லை அண்ணா பல்கலைகழகம்
திருநெல்வேலி சிறப்பு எது
அன்பால் கரைக்கும்
நெல்லைத் தமிழா?
நுனி நாக்குத் தொடங்கி
ஆள் உயிர் வரை இனிக்கும்
இருட்டுக் கடை அல்வாவா?
இல்லை கோடி அடுக்கி
உயிர் தீரப் படித்தாலும்
படிகாததை கேள்விக்கும்
அண்ணா பல்கலைகழகம்
அப்டியே தவறியும் பக்கங்களை
உன் மூளையால் நிரப்பிவிட்டாய் எனில்
அதற்கு பூஜ்யங்களை மட்டும்தான்
போடத்தெரிந்த
திருநெல்வேலி சிங்கங்கள்
இவர்களிடம் ஐன்ஸ்டீனும் முட்டலாவார்
அலெக்சாண்டரும் தோல்வி காண்பான்
தேர்தல் சிறப்புப் பரிசு
நேற்று...
சிந்தபோகும்
ஈழ ரத்தத்தின்
ஒத்திகை...
அதற்க்கு அரசியல் தலைகள்
சிந்தும் முதலை கண்ணீரின்
நகலிது...
இன்று...
நம் மக்களாட்சி
உரிமையை 200 ரூபாய்க்கு
விற்று விட்டு
அத்தியாவசியங்களை அதிக விலைக்கு வாங்கும்
அவலத்தின் ரசிது...
நாளை...
நாங்கள் பிறந்தப்
பிறகு எங்களுக்கு எழுதப்படும்
தலையெழுத்து
(எத்தனாவது முறை என்று EC ல கேட்டுக்கோங்க)
இதன் பிழைகள் அடுத்த
ஐந்தாண்டில் திருந்தும்
என்ற கனவோடு
(நம்பிக்கை இல்லை கனவு)
Tuesday, April 12, 2011
இந்தத் தேர்தல் - மாற்றம் கொண்டு வருமா?
மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பாம்...
தீர்ப்பை சொல்லப் போவது
ஓட்டுக் காகிதமா...பண நோட்டுக் காகிதமா
இதோ முடிவு நெருங்குகிறது
தன் தலைஎழுத்தை
மாற்றத் தெரியா
ஆறறிவு மாக்கள் கூட்டம்
நாட்டின் தலைஎழுத்தை மாற்ற
200 ரூபாயில்
உயிர் நிகர் உரிமையை
மக்களாட்சி என்பதற்கு
எஞ்சி இருக்கும் ஒரே சாட்சியம்
ஓட்டுரிமையை
வியாபராம் செய்யும் மனசாட்சி
(பெரிய மீனை பிடிக்க போடும் சிறிய மீன்கள் )
49 -O ஆம் , அசோகச் சின்னமாம்
சோம்பேறி அரசியல்வாதிக்கு
படுத்துறங்கும் பஞ்சனையை
பணத்தால் எவன் தருவானோ
அவன் கட்சி கூட்டணியில் ஒரு உல்லாசப் பயணம்
பின்பு பணம் கொஞ்சம் குரையையிலே
அவனையே எதிர்த்து ஊர் போராட்ட முழக்கம்
பணக் காகித அனணக்குள்ளே
மனித மனம் கட்டுண்ட விந்தை என
தேர்தலும் ஓட்டும் விளையாட்டகிப் போன
அவலம்
என் முதல் ஒட்டு இந்த ஆண்டு
மாற்றம் கொண்டு வரும் இந்த தேர்தல்
என்ற நம்பிக்கையுடன்
Saturday, April 9, 2011
Thursday, April 7, 2011
Tuesday, April 5, 2011
Dedicated to Mepco EEE A 2007-11
ஏழு வண்ணங்கள் சேராமல்
வானவில் ஏது?
65 உயிர் ஓருடலில் சேராமல்
இந்த இனிமை நினைவெது
சுகமான நினைவுதான்
வானவில் ஏது?
65 உயிர் ஓருடலில் சேராமல்
இந்த இனிமை நினைவெது
சுகமான நினைவுதான்
இருந்தும் சுமையாக இருக்குது...
தாய் கருவை பிரிந்து
தன்னுலகை காண வந்த
சேயை போல நானும்
இன்று பிரிகிறேன் என் நட்பினை
இதோ சுயநல உலகை காண...
வரும் நாளில்
என் செல்லமகன்
முத்தமிட்டு பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொன்னாலும்
மை கலந்து குளிப்பாட்டி...
செல்ல அடியால் புத்துயிர்
ஊட்டிய அந்த 12 மணிக்
கொண்டாட்டங்கள் திரும்பிடுமா?
நுனி நக்குத் தொடங்கி
அடித் தொண்டை வரை
சுகம் பரப்ப...அருமை மனைவி
சமைத்துப் போட்டாலும்...
ஒரேத் தட்டில் பாய்ந்து உண்ட
விடுதி பூரி போல் சுவைத் தருமா?
புன்னகைக்கு ஒன்று
கண்ணீர்க்கு ஒன்றை
நிறம் மாறி பகிர்ந்து கொள்ள
துணை நிற்கும் என் தோழமை போல்
அவன் தோள், மடி போல்
சொர்கத்து பஞ்சணையும் சுகம் தருமோ?
கிறுக்கல்களை ஓவியம் என்றும்
புலம்பல்களை கவிதைகள் என்றும்
முனங்கல்கள் எல்லாம் பாடல்கள் என்றும்
பொய் சொல்லியாவது எனை
ஊக்குவிக்க இனி எவன் வருவான்?
வலிதந்த முதல் காதல்,
வழிதந்த CTS ,
வாழ்கை சொன்ன தோழமை,
உயிர் இல்லாமல் உடலை வாழச்
சொன்ன காலம்
கண்ணீரால் நட்புக்கு புது
உயிராசனம் எழுதிய farewell என
கண்ணீரால் நட்புக்கு புது
உயிராசனம் எழுதிய farewell என
மெப்கோ ஒரு விசித்திர அனுபவம்....
Subscribe to:
Posts (Atom)