Tuesday, April 5, 2011

Dedicated to Mepco EEE A 2007-11

ஏழு வண்ணங்கள் சேராமல்
வானவில் ஏது?
65 உயிர் ஓருடலில் சேராமல்
இந்த இனிமை நினைவெது    

சுகமான நினைவுதான்
இருந்தும் சுமையாக இருக்குது...

தாய் கருவை பிரிந்து
தன்னுலகை காண வந்த
சேயை போல நானும்
இன்று பிரிகிறேன் என் நட்பினை
இதோ சுயநல உலகை காண...


வரும் நாளில்
என் செல்லமகன்
முத்தமிட்டு பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொன்னாலும்
மை கலந்து குளிப்பாட்டி...
செல்ல அடியால் புத்துயிர்
ஊட்டிய அந்த 12 மணிக்
கொண்டாட்டங்கள் திரும்பிடுமா?

நுனி நக்குத் தொடங்கி
அடித் தொண்டை வரை
சுகம் பரப்ப...அருமை மனைவி
சமைத்துப் போட்டாலும்...
ஒரேத் தட்டில் பாய்ந்து உண்ட
விடுதி பூரி போல் சுவைத் தருமா?

புன்னகைக்கு ஒன்று
கண்ணீர்க்கு ஒன்றை
நிறம் மாறி பகிர்ந்து கொள்ள 
துணை நிற்கும் என் தோழமை போல்
அவன் தோள், மடி போல் 
சொர்கத்து பஞ்சணையும் சுகம் தருமோ?  

கிறுக்கல்களை ஓவியம் என்றும்
புலம்பல்களை கவிதைகள் என்றும்
முனங்கல்கள் எல்லாம் பாடல்கள் என்றும்
பொய் சொல்லியாவது எனை
ஊக்குவிக்க இனி எவன் வருவான்?

வலிதந்த முதல் காதல்,
வழிதந்த CTS ,
வாழ்கை சொன்ன தோழமை,
உயிர் இல்லாமல் உடலை வாழச்
சொன்ன காலம்
கண்ணீரால் நட்புக்கு புது
உயிராசனம் எழுதிய farewell என
மெப்கோ ஒரு விசித்திர அனுபவம்....
Dedicated to EEE A
B in touch frnds...Don't ever dare to forget tis fello :( Bcoz i don't hav such guts :'(

3 comments:

  1. very nice jam......gonna to misss our class very much

    ReplyDelete
  2. Gonna miss loads and loads of fun that we had these years...each and every soul in our class taught me a lot and i owe them lots more...Stay in touch buddies...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்