மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பாம்...
தீர்ப்பை சொல்லப் போவது
ஓட்டுக் காகிதமா...பண நோட்டுக் காகிதமா
இதோ முடிவு நெருங்குகிறது
தன் தலைஎழுத்தை
மாற்றத் தெரியா
ஆறறிவு மாக்கள் கூட்டம்
நாட்டின் தலைஎழுத்தை மாற்ற
200 ரூபாயில்
உயிர் நிகர் உரிமையை
மக்களாட்சி என்பதற்கு
எஞ்சி இருக்கும் ஒரே சாட்சியம்
ஓட்டுரிமையை
வியாபராம் செய்யும் மனசாட்சி
(பெரிய மீனை பிடிக்க போடும் சிறிய மீன்கள் )
49 -O ஆம் , அசோகச் சின்னமாம்
சோம்பேறி அரசியல்வாதிக்கு
படுத்துறங்கும் பஞ்சனையை
பணத்தால் எவன் தருவானோ
அவன் கட்சி கூட்டணியில் ஒரு உல்லாசப் பயணம்
பின்பு பணம் கொஞ்சம் குரையையிலே
அவனையே எதிர்த்து ஊர் போராட்ட முழக்கம்
பணக் காகித அனணக்குள்ளே
மனித மனம் கட்டுண்ட விந்தை என
தேர்தலும் ஓட்டும் விளையாட்டகிப் போன
அவலம்
என் முதல் ஒட்டு இந்த ஆண்டு
மாற்றம் கொண்டு வரும் இந்த தேர்தல்
என்ற நம்பிக்கையுடன்
yaruku ??-------potenga anna
ReplyDelete