தன் முளையில் பாலுன்ன
வலியாய் உணர்ந்த தாய் உண்டோ?
இதோ என் கற்பனையை
உறிஞ்சி பெருகும் என்
கவி குழந்தைக்கு நான் தினம்
வருந்தி சாகிறேன் ... ஏனெனில்
என் கவி சுட்டுவது
நடந்தேறும் குற்றத்தை அல்லவா
என் கவியின் பெருக்கம்
சுட்டிக் கட்டுது முற்றி வரும்
கழி காலத்தை அன்றோ?
No comments:
Post a Comment