ஏறத்தாள 580
விரல்கள் என்
வெற்றிக்காய் போராடும்
580 இருதயம்
துடிக்கும்
நான் ஒருவன் உயிர்வாழ
நினைவுகள்
sight அடிக்காத ஆணின் கண்
ஓரவிழி பாரா பெண்
(இரண்டையும் பலர் பல விதத்தில் பொருட் படுத்தலாம்)
கவிகள் சுமக்கா கல்லூரி மேசை
இவைகள் தான் உலகில்
பெரும் பாவிகள் பட்டியலின்
முதாலாமவர்கள்
என்னை அழகாய் மட்டுமே
காட்டத் தெரிந்த
தோழனின் சட்டைகள்
ஓசை வாராமல் பேச முடியுமா?
இதழ்கள் அசையாமல் வார்த்தை பிறக்குமா?
இவைகள் என் தோழிகளின்
தனி திறமைகள்
ரகசிய சிறை வைத்த
குற்றத்திற்காக
கத்தி அம்பலப்படுத்திய
தோழியின் கைப்பேசி
நாங்கள் வருங்கால
isro விஞ்ஞானிகள்.
இதோ சான்றாய் பரந்த
காகித ராக்கெட்கள்
உண்மை நேசத்திற்கு
ஆண் பெண் எல்லை இல்லை
உண்மை காண வைத்த
infy campus connect
மன்னிப்புக் கடிதத்தின்
நுனி பிடித்து
உயிர் உசலாடிய
தாத்தா வகுப்பு
வருகை பதிவேடு
வருகை பதிவேடும் 50 ரூபாயும்
சடுகுடு ஆடிய
செமெஸ்டரின் கடைசி நிமிடங்கள்
49 க்கும் 50 க்கும்
இடைப்பட்டதே உலகில் இருக்கும்
மிக நீண்ட...ஆபத்தான பாதை
எவன் அழைத்தான்
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வருகிறது
பரிட்சை முதல் நாள் தூக்கம்
என்னை சோம்பேறி ஆக்கிய காலைக் கடிகாரம்
அலுப்பில் கொஞ்சம் சோம்பேறி ஆனா பாடவேளைக் கடிகாரம்
பெரும் பச்சோந்திகள்
புது புது கரைசல்கள்...வேதியியல் ஆராய்சிகள்
விஞ்ஞானிகளை மிஞ்ச வைத்த
பிறந்தநாள் ஆயத்தங்கள்
வருடத்திற்கு இரண்டு முன்று
பிறந்தநாள் கேட்க்க வைக்கும்
சந்தோசத் திண்டாட்டங்கள்(மன்னிக்கவும் கொண்டாட்டங்கள்)
ஆனந்த மழையில் நனைய வைத்த
மாலை விடுதி விருந்தும்
காய வைத்த warden enquiryயும்
உரைய வைத்த கோடை உலாவும்
நடுங்க வைத்த அபராதமும்
Placement போருக்கு
முன் நாள் POவின் வீரவுரையும்
11 மணி ஐரோப்பா வரலாறும்
8 மணி வரை நீளும் மாலை உரையாடலும்
முதல் முறை திறமையை
அடையாளம் கண்டு
மறுமுறை ஏமாற்றும்
அரசியல் சொன்ன festember
பசி ருசி அறியாது
சொல்லித் தந்த விடுதி உணவு
அழையா விருந்தாளி "கண்ணீர்"
கெடுத்த பிரியாவிடை விருந்து
Dedicated to Mepco Friends, those who fill the pages of my life as smiles, tears, teases and sweet memories...I love u friends...
I won't miss U...Bcoz b touch with tis idiot
hi jam... this is really awesome and sure to be in touch...
ReplyDelete