Tuesday, April 26, 2011

கற்பனை பூ வந்த உண்மை வண்டு

இவைகள் கற்பனைகளும் அல்ல காயப்படுத்த எழுதியதும் அல்ல
சிந்தை சிலிர்க்க சிந்தும் சிந்தனைச் சாரல் 
இவை பலரை காயப்படுத்தலாம்
உண்மையில் உள்ளத்தின் உண்மையை பேசுபவனே
உதட்டில் உண்மை கொண்டவன்
இதோ என் இதயம் இயம்பும் உண்மைகள் 

இதையும் தாண்டி காயம் 
ஆழ் சென்றால் மன்னிப்பை வேண்டுகிறேன் 



இதோ அறிவார்ந்த ஆண் மகனே!
உனக்காய் ஒரு கேள்வி...
ஆழி அமைதி பெண் மனதில்
அமிழ்ந்துப்போன வார்த்தைகள் 





உன் அகராதியில் பெண் என்றால்

காதல் என்ற நம்பிக்கையில் 
நீ மீறும் வரம்புகளுக்கு வழிவிட
இறுதியில் தோற்றுப் போய்  
தூக்குப் போடும் அனாமத்து உயிரோ?

நீ நேரடியாய் பலி வாங்குவது
ஓர் உயிர்
சமுகத்தில் ஆண்மகன் மேல் 
அழியா தீம் பெயர் உருவாக்கி
பலி இடுவது 
எண்ணி அடங்கா உயிர் 



காலனிடம் சவாலிட்ட
சாவித்திரியின் வாரிசுகளே!
உங்களிடம் சவாலிடும் கேள்வி இதோ 
அடங்கா ஆண்மகனின் ஆழ் மனதில்
அடங்கிப் போன வார்த்தைகள் 



உண்மையில் 
காதலை நீங்கள் வெறுப்பது எதனால்?
பெற்றோரின் மேல் கொண்ட மதிப்பாலோ 
நல்லவன் கிடைக்காத வெறுப்பாலோ 

உண்மை இதுவகத் தான் 
இருந்திட வேண்டும் 

மூச்சு முட்டும் அளவில் பணம்
இமைக்கின்ற ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு நாட்டுப் பயணம்
இப்படி வாழ்க்கைத் தேடி தரும்
பெற்றோரின் தேர்வை தகர்த்தெறிந்து
உயிர் உருகும் தெய்விகம்
என்று வறுமையின் வாசத்தில்
காதல் வசனம் பேச
விருப்பம் இல்லையோ?

மன்னிப்புடன் பதிக்கிறேன் 


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்