Sunday, August 28, 2011
Wednesday, August 24, 2011
பேருந்துக் காதல் - III
இரும்புக் கிளையில்
மலர் போலே
தகர பேருந்துக்குள்
நீ! பேருந்து அலங்கரிக்கமலே
அழகானது
புதரின் நெரிசல்குள்ளே தானே
ரோஜா ஒளிந்திருக்கும்
இந்தக் நெரிசலிலும்
கசங்காமல் நீ!
நெரிஞ்சில் காட்டுக்குள்ளே
நடையிடும் பாதத்தின் கவனம் போல
தேனைக் களவாட தேன் கூடு
நெருங்கும் விரலின் பதற்றத்தோடு
உன் அழகை களவாடுது என் விழி
அது எப்படி
உன் நெற்றி வானத்தில் மட்டும்
பகலில், தினம்
ஒரு வண்ணத்தில் நிலவு ?
சன்னலோரத்தில் நீ அமர்கையில்
காற்று துச்சாதனன் ஆவதும்
உன் கரங்கள் கண்ணனாவதும்
தனி அழகே!
இரண்டடிக்குள்ளே
உலக வேதம் முழுதும் அடக்கிய
வள்ளுவம் போல நீயும்
ஆறடிக்குள்ளே
அழகின் வேதம் முழுதும் அடக்கிய
கவித்துவம் நீயடி
ஒரே எழுத்தால்
ஆறடி காகிதத்தை நிரப்பிய
கவிதை நீயடி
நீ உள் இருந்ததால்
அன்று மட்டும்
நடத்துனரின் சொல் வரும் முன்
படியில் தொங்காமல்
உள் நகர்ந்தேன் நான்
நீ கடத்தி விடுவாய்
என்பதற்காய்
உன் முன் பொய் நின்றுகொண்டபின்
பயணச் சீட்டு நான் கேட்டேன்
விலை தெரிந்தும்
சில்லறை குறையாய்
கொடுத்துவிட்டேன்
என்னிடம் நீ கேட்பதர்காய்
பேசுவாய் அல்லவா?
நடத்துனரின் கை
நின்றிடாத சில்லறை போல
முடிந்த ஒரு மணி நேரத்தில்
என் கை நழுவும்
காதலே!
தொடரும் நம்பிக்கையில்
முற்றுபுள்ளியை தொலைக்கிறேன் ...
Friday, August 19, 2011
பேருந்துக் காதல் - II
எனது வாடிக்கை பேருந்தை
ஒரு நொடி தாமதத்தில்
தவற விட்டதற்காய்
ஒரு மகிழ்ச்சி
நான் பிடித்த பேருந்தில் நீ இருந்ததால்
நீ அமர்ந்து இருந்ததால்
அரசு பேருந்துகூட
அழகாய் தெரிந்தது
உன் சேலை நேர்த்தியை
பார்க்கையிலே
ஆண்களுக்கும் ஒரு நாள்
சேலை கட்டும் ஆசை வரும்
சலவை செய்யப் பட்ட
நிலவு பூமி வந்தது
அதை பிரிய மனமின்றி
முகிலும் துணையாய் வந்தது
உன்னை புடவையில் பார்த்த
முதல் நொடி
இதயம் வடித்த வரிகளடி
என்னை உன்புறமாய்
நகட்டியதால்
கூட்ட நெரிசலும்
பிடித்தது
brake மிதிக்கப்படாமலே
நீ இருக்கும் முன்புறம்
அடிக்கடி விழுவதாய்
உன் பார்வையை
களவாடிக் கொண்டேன்
இரண்டு வானவில்
அதுவும் ஒரேத் திசையில் ...
கருப்பு நிறத்தில்...
நிச்சயம் நீ
அறிவியல் அதிசயம்
வளைவுகளில் நெளிவுகளில்
விசை உன்னை வீழ்த்த மறந்து
அது உன்மேல் வீழ்கிறது
சேரும் இடம்
நடத்துனர் கேட்டதற்கு
நான் உன்னை பார்க்க
அவன் கோபத்தின் உச்சியில்...
என் மனதின் இலக்கு
நீ மட்டுமே
என்றறிந்தவன் நான் ஒருவனே
ஒரு மணி நேரத்தில்
செல்லாது என்று தெரிந்தும்
10 ரூபாய்கு விலை போகும்
பயணச் சீட்டு போல
என் ஒரு மணி நேரக் காதல் ,
என் மனதை விலையாக்கிவிட்டேன்
நடத்துனரை மன்னித்திடலாம்
அவர் கலவாடியதோ
என் கலனாவை
அனால் அவள் என்
இருதயத்தை !!
பேருந்து வாயில் போல
என் இருதயமும்
உள் நுழையும்
ஒட்டுனர் பயணி
எவர் உறவு பேருந்தோடு நிரந்தரம் ?
அதே இடைவெளி தான்
உண்மைக் காதலுக்கும்
இந்த ஒரு மணி நேரக் காதலுக்கும்
ஏவளும் என்னவளுக்கு ஈடில்லை
Wednesday, August 17, 2011
Monday, August 15, 2011
என்றுத் தணியும் எங்கள் சுதந்திரத் தாகம்?
200 ஆண்டுகள்
அன்னை பாட்டினில்
வெள்ளை நிறத்தில் ஓர் கறை
மைந்தர்கள்
தந்தம் குருதியை ஆராக்கி
கந்தையை கசக்கி
அழுக்கை அடித்தொட்டினர்.
64 ஆண்டுகள் பரந்தொடின
காந்தி சொன்ன
"பெண்ணொருத்தி 7 மணி மேலே
தனியாய் பொய் வரவும் " முடியவில்லை
பாரதி கண்ட
"கங்கையும் சிந்துவும்
காவிரி வைகையைத் தொட்டு தழுவி
குமரியின் பாதம் நனைக்கும்"
கனவும் நடந்தேரவில்லை
அன்று அந்நியனுக்கு
இன்று நம்மவனுக்கு
மாறாதது நம் அடிமைத்தனம்
ஏழை பேச்சு அம்பலம் ஏரியதில்லை
அனால் ஏழையின் காசில்தான் அந்த அம்பலமே!
பிள்ளையை பட்டினி போட்டு
சேரியோரம்
இட்லி சுட்டு வித்தக் காசு
லாடம் அடித்துக் கொள்ள முடியாதல்லவா
பாதம் தேய உழைத்தக் காசு
வண்டு குடைந்த பருப்பு கூடு
புழு நெளிந்த அரிசிச் சோறு
இப்படி உண்டு உடல் வளர்த்து
உயிர் தீர நான் உழைக்க
உட்கார்ந்து சேர்த்தக் கொழுப்பு
வியர்வையை போயிருமுனு
குளு குளு காரால
ஊரு சுத்தும் மேலிடமே
என் அப்பனுக்கும் மேலானவன்
உலகிற்க்கே அரசியல் சொன்னவன்
காந்தி-காமராசன்-ராமசாமி-அண்ணா
அவன் பெயரை உச்சரிக்கக்கூட
தகுதியில் தரித்திரமே
நீ அவன் பெயரால் கட்சி கொண்டு
எங்கள் உயிரை உழலாய்
உறிஞ்சுகிறாய்.
அரசியல் தான் இப்படி என்றால்
குடிமகனோ எட்டனாவின்
முதுகுப் பக்கம் போல்
படித்த வரிகளின் விரல் பற்றி
நடக்க வேண்டும்
இல்லையேல் படித்து என்ன பயன்
பயணச் சீட்டு இல்லா பயணம்
கண்ட இடமெல்லாம் உமிழும் உதடு
வரதட்சணை-சிசுக்கொலை-குழந்தைத்தொழில்
பாலியல் வன்மம்-மாசாக்கம்
என்று எட்டுத் திசையையும்
சூதால் நிறைக்கிறான்
என்று
ஓர் குடிமகன்
மது சூது இல்லாமல்
பிறர் வயிறு நிறைக்கா விடிலும்
இடையூறாய் இல்லா வாழ்வு
கொள்கிறானோ
அரசியல் திருந்தும்
அரசியல்வாதியும் ஓர் குடிமகன் தானே
அன்றுத் தணியும் எங்கள் சுதந்திரத் தாகம்
Saturday, August 13, 2011
பேருந்துக் காதல் - I
விழியோடு விழிகள்
மோதிய பார்வை யுத்தம்
இதில் அவள் விழி கொண்டது
என் இருதயத்தை நூறு துண்டம்
கூட்ட நெரிசலில்
நசுங்கிய என் காலைப் போலே
அவள் பார்வை நெரிசலில்
சிக்கி சுகமாய் நசுங்கிப் போனது
எனது லப்டப்
கன்னி அவள் காந்தமும் இல்லை
எந்தன் இருதயம் இரும்பும் இல்லை
இருந்தும் அவள் புறம் தானாய்
திரும்பி நின்றது ஏனோ
ஜன்னலோர இருக்கையில் இருந்து
உள் புறம் வேடிக்கை பார்த்த
ஒரே அசடு நான்.
ஏனோ திடிரென மிதிபட்ட
BRAKEஆல் நான் மட்டும்
நீ இருக்கும் பின்புறம்
விழ்கிறேன்
நீ வாங்கிக் கடத்தி விடுவதால்
அன்று மட்டும் கோடி முறை
பயணச் சீட்டு நான் எடுத்தேன்
உன் க(ண்)ம்பி பிடித்து
என் உயிர்
காதல் பேருந்தோடு
கொண்டது ஒரு படிப் பயணம்!
நடத்துனரிடம் பற்றான
எட்டனக்காய் பெருமூச்சோடு ஏங்கும்
குடிமகன் போல்
ஒரு மணிநேரக் காதலுக்கு உயிரைக் கொடுத்துவிட்டு
மிச்ச பணத்(மன)தை வாங்க மறந்து போகிறேன்
பயணம் முடிந்ததும்
செல்லாமல் போனது
பயணச் சீட்டு மட்டுமல்ல
யார் என்று அறியாமல்
கடன் கொடுத்த வட்டி கணக்கு வரவு போல
உன்னிடம் பரி கொடுத்த எனது மனமும்
Friday, August 12, 2011
Thursday, August 11, 2011
Sunday, August 7, 2011
வாழ வைத்தவனுக்கு வாழ்த்து
ஜீன்ஸ் துணி
நூல் இலை கொண்ட
தூரம் கூட அதிகம்
தோழா என் உன் சிந்தை
ஒப்பிடையில்
விரலும் நகமும்
உடலும் உயிரும்
மலரும் தேனும்
உடுக்கை இழந்தக் கை
இப்படி வற்றிப் போன
கவிஞர்களின் உவமைப் பட்டியலை
புதுப்பித்தோம் நம் நட்பால்
என்னையும் அழகாக்கிய
உன் அழுக்குச் சட்டை
உன் தட்டில் பிடுங்கித் தின்றதால் என் நாவில்
மெதுவாய் மாறிய கல் இட்லி
உடலுக்குள் அடை பட்ட உயிரைத் தவிர
கண்டது கொண்டது எல்லாம் பகிரப் பட்டது இங்கே
உலகில் சுமையானது கண்ணீர்
அதை நான் அறியாமலே போனேன் 22 ஆண்டுகாளாய்
22 ஆம் ஆண்டு மிக சிறப்பு
என் நட்பின் தேசத்தில்
மக்கள் தொகை பெருக்கம் அதிகம்
என் வாழ்வின் வானத்தில் பவுர்ணமி கொணர்ந்தத் தோழமையே
நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்
Saturday, August 6, 2011
ஏன் இந்தப் பிறப்பு?
தவளையாய் நான் பிறந்து
அவள் கல்விக்காய்
மடிந்திருக்கலாம்
குடையாய் நான் பிறந்து
அவள் சுகத்திற்காய்
வெயிலோடு கருகி இருக்கலாம்
துணியை நான் பிறந்து
அவள் உடைக்காய் துணிந்து
மார்போடு உசியை வங்கி இருக்கலாம்
போயும் போயும்
மனிதனாய் நான் பிறந்தேன்
அவளோடு காதல் கொண்டு
கண்ணீர் திரித்தக் கயிறு
கழுத்தை நெரிக்க
மரணிக்கிறேன் ஏனோ?
Subscribe to:
Posts (Atom)