விழியோடு விழிகள்
மோதிய பார்வை யுத்தம்
இதில் அவள் விழி கொண்டது
என் இருதயத்தை நூறு துண்டம்
கூட்ட நெரிசலில்
நசுங்கிய என் காலைப் போலே
அவள் பார்வை நெரிசலில்
சிக்கி சுகமாய் நசுங்கிப் போனது
எனது லப்டப்
கன்னி அவள் காந்தமும் இல்லை
எந்தன் இருதயம் இரும்பும் இல்லை
இருந்தும் அவள் புறம் தானாய்
திரும்பி நின்றது ஏனோ
ஜன்னலோர இருக்கையில் இருந்து
உள் புறம் வேடிக்கை பார்த்த
ஒரே அசடு நான்.
ஏனோ திடிரென மிதிபட்ட
BRAKEஆல் நான் மட்டும்
நீ இருக்கும் பின்புறம்
விழ்கிறேன்
நீ வாங்கிக் கடத்தி விடுவதால்
அன்று மட்டும் கோடி முறை
பயணச் சீட்டு நான் எடுத்தேன்
உன் க(ண்)ம்பி பிடித்து
என் உயிர்
காதல் பேருந்தோடு
கொண்டது ஒரு படிப் பயணம்!
நடத்துனரிடம் பற்றான
எட்டனக்காய் பெருமூச்சோடு ஏங்கும்
குடிமகன் போல்
ஒரு மணிநேரக் காதலுக்கு உயிரைக் கொடுத்துவிட்டு
மிச்ச பணத்(மன)தை வாங்க மறந்து போகிறேன்
பயணம் முடிந்ததும்
செல்லாமல் போனது
பயணச் சீட்டு மட்டுமல்ல
யார் என்று அறியாமல்
கடன் கொடுத்த வட்டி கணக்கு வரவு போல
உன்னிடம் பரி கொடுத்த எனது மனமும்
பேருந்துக் காதல் விடை தெரியா சுகமான பயணம்... வாழ்த்துக்கள்
ReplyDeleteவங்கித் --> வாங்கித்
ReplyDelete