Monday, August 15, 2011

என்றுத் தணியும் எங்கள் சுதந்திரத் தாகம்?


200 ஆண்டுகள் 
அன்னை பாட்டினில் 
வெள்ளை நிறத்தில் ஓர் கறை
மைந்தர்கள் 
தந்தம் குருதியை ஆராக்கி 
கந்தையை கசக்கி 
அழுக்கை அடித்தொட்டினர்.

64 ஆண்டுகள் பரந்தொடின 

காந்தி சொன்ன
"பெண்ணொருத்தி 7 மணி மேலே 
தனியாய் பொய் வரவும் " முடியவில்லை

பாரதி கண்ட 
"கங்கையும் சிந்துவும் 
காவிரி வைகையைத் தொட்டு தழுவி 
குமரியின் பாதம் நனைக்கும்" 
கனவும் நடந்தேரவில்லை 

அன்று அந்நியனுக்கு
இன்று நம்மவனுக்கு 
மாறாதது நம் அடிமைத்தனம் 

ஏழை பேச்சு அம்பலம் ஏரியதில்லை 
அனால் ஏழையின் காசில்தான் அந்த அம்பலமே!
பிள்ளையை பட்டினி போட்டு 
சேரியோரம் 
இட்லி சுட்டு வித்தக் காசு 
லாடம் அடித்துக் கொள்ள முடியாதல்லவா 
பாதம் தேய உழைத்தக் காசு 
வண்டு குடைந்த பருப்பு கூடு
புழு நெளிந்த அரிசிச் சோறு 
இப்படி உண்டு உடல் வளர்த்து
உயிர் தீர நான் உழைக்க 

உட்கார்ந்து சேர்த்தக் கொழுப்பு
வியர்வையை போயிருமுனு 
குளு குளு காரால 
ஊரு சுத்தும் மேலிடமே 

என் அப்பனுக்கும் மேலானவன்
உலகிற்க்கே அரசியல் சொன்னவன்
காந்தி-காமராசன்-ராமசாமி-அண்ணா 
அவன் பெயரை உச்சரிக்கக்கூட 
தகுதியில் தரித்திரமே
நீ அவன் பெயரால் கட்சி கொண்டு
எங்கள் உயிரை உழலாய் 
உறிஞ்சுகிறாய்.

அரசியல் தான் இப்படி என்றால் 
குடிமகனோ எட்டனாவின் 
முதுகுப் பக்கம் போல் 

படித்த வரிகளின் விரல் பற்றி 
நடக்க வேண்டும் 
இல்லையேல் படித்து என்ன பயன்

பயணச் சீட்டு இல்லா பயணம்
கண்ட இடமெல்லாம் உமிழும் உதடு 
வரதட்சணை-சிசுக்கொலை-குழந்தைத்தொழில்
பாலியல் வன்மம்-மாசாக்கம் 
என்று எட்டுத் திசையையும் 
சூதால் நிறைக்கிறான் 

என்று
ஓர் குடிமகன்
மது சூது இல்லாமல்
பிறர் வயிறு நிறைக்கா விடிலும்
இடையூறாய் இல்லா வாழ்வு 
கொள்கிறானோ 
அரசியல் திருந்தும்
அரசியல்வாதியும் ஓர் குடிமகன் தானே 

அன்றுத் தணியும் எங்கள் சுதந்திரத் தாகம் 




1 comment:

  1. என்று தணியும் இந்த சுந்தந்திர தாகம் கவிதை ஆதங்கம் முறையானதே...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்