எனது வாடிக்கை பேருந்தை
ஒரு நொடி தாமதத்தில்
தவற விட்டதற்காய்
ஒரு மகிழ்ச்சி
நான் பிடித்த பேருந்தில் நீ இருந்ததால்
நீ அமர்ந்து இருந்ததால்
அரசு பேருந்துகூட
அழகாய் தெரிந்தது
உன் சேலை நேர்த்தியை
பார்க்கையிலே
ஆண்களுக்கும் ஒரு நாள்
சேலை கட்டும் ஆசை வரும்
சலவை செய்யப் பட்ட
நிலவு பூமி வந்தது
அதை பிரிய மனமின்றி
முகிலும் துணையாய் வந்தது
உன்னை புடவையில் பார்த்த
முதல் நொடி
இதயம் வடித்த வரிகளடி
என்னை உன்புறமாய்
நகட்டியதால்
கூட்ட நெரிசலும்
பிடித்தது
brake மிதிக்கப்படாமலே
நீ இருக்கும் முன்புறம்
அடிக்கடி விழுவதாய்
உன் பார்வையை
களவாடிக் கொண்டேன்
இரண்டு வானவில்
அதுவும் ஒரேத் திசையில் ...
கருப்பு நிறத்தில்...
நிச்சயம் நீ
அறிவியல் அதிசயம்
வளைவுகளில் நெளிவுகளில்
விசை உன்னை வீழ்த்த மறந்து
அது உன்மேல் வீழ்கிறது
சேரும் இடம்
நடத்துனர் கேட்டதற்கு
நான் உன்னை பார்க்க
அவன் கோபத்தின் உச்சியில்...
என் மனதின் இலக்கு
நீ மட்டுமே
என்றறிந்தவன் நான் ஒருவனே
ஒரு மணி நேரத்தில்
செல்லாது என்று தெரிந்தும்
10 ரூபாய்கு விலை போகும்
பயணச் சீட்டு போல
என் ஒரு மணி நேரக் காதல் ,
என் மனதை விலையாக்கிவிட்டேன்
நடத்துனரை மன்னித்திடலாம்
அவர் கலவாடியதோ
என் கலனாவை
அனால் அவள் என்
இருதயத்தை !!
பேருந்து வாயில் போல
என் இருதயமும்
உள் நுழையும்
ஒட்டுனர் பயணி
எவர் உறவு பேருந்தோடு நிரந்தரம் ?
அதே இடைவெளி தான்
உண்மைக் காதலுக்கும்
இந்த ஒரு மணி நேரக் காதலுக்கும்
ஏவளும் என்னவளுக்கு ஈடில்லை
அப்படி என்னதான் கேரளத்து பெண்களிடம் உள்ளதோ!!. தமிழ் ஆண்களை இப்படி மயக்குகிறார்களே..:/
ReplyDelete-பாதிக்கப்பட்ட மற்றொருவன்!..:P
கவிதையில் காதல் ஏக்கங்கள் கனாவாக கலக்குகிறது... வாழ்த்துக்கள்
ReplyDeletesema feelings
ReplyDelete