சந்தேகிக்கிறேன்
கட்டி இருக்கிய
காதலர்கள் நடுவே
இலேசாய் கசிந்து வரும்
காற்று போல
அவள் ஓர விழி
நிரம்பி வலிந்து
என்னை நனைக்கும்
பார்வை வெள்ளத்தை
அவள் உணராமல்
நான் என் விழியாலே
மெல்ல பருகையிலே
அமுதும் இவ்வளவு
சுவைக்குமா என
சந்தேகிக்கிறேன்
காதலிக்கப்படாதவன்
No comments:
Post a Comment