இரும்புக் கிளையில்
மலர் போலே
தகர பேருந்துக்குள்
நீ! பேருந்து அலங்கரிக்கமலே
அழகானது
புதரின் நெரிசல்குள்ளே தானே
ரோஜா ஒளிந்திருக்கும்
இந்தக் நெரிசலிலும்
கசங்காமல் நீ!
நெரிஞ்சில் காட்டுக்குள்ளே
நடையிடும் பாதத்தின் கவனம் போல
தேனைக் களவாட தேன் கூடு
நெருங்கும் விரலின் பதற்றத்தோடு
உன் அழகை களவாடுது என் விழி
அது எப்படி
உன் நெற்றி வானத்தில் மட்டும்
பகலில், தினம்
ஒரு வண்ணத்தில் நிலவு ?
சன்னலோரத்தில் நீ அமர்கையில்
காற்று துச்சாதனன் ஆவதும்
உன் கரங்கள் கண்ணனாவதும்
தனி அழகே!
இரண்டடிக்குள்ளே
உலக வேதம் முழுதும் அடக்கிய
வள்ளுவம் போல நீயும்
ஆறடிக்குள்ளே
அழகின் வேதம் முழுதும் அடக்கிய
கவித்துவம் நீயடி
ஒரே எழுத்தால்
ஆறடி காகிதத்தை நிரப்பிய
கவிதை நீயடி
நீ உள் இருந்ததால்
அன்று மட்டும்
நடத்துனரின் சொல் வரும் முன்
படியில் தொங்காமல்
உள் நகர்ந்தேன் நான்
நீ கடத்தி விடுவாய்
என்பதற்காய்
உன் முன் பொய் நின்றுகொண்டபின்
பயணச் சீட்டு நான் கேட்டேன்
விலை தெரிந்தும்
சில்லறை குறையாய்
கொடுத்துவிட்டேன்
என்னிடம் நீ கேட்பதர்காய்
பேசுவாய் அல்லவா?
நடத்துனரின் கை
நின்றிடாத சில்லறை போல
முடிந்த ஒரு மணி நேரத்தில்
என் கை நழுவும்
காதலே!
தொடரும் நம்பிக்கையில்
முற்றுபுள்ளியை தொலைக்கிறேன் ...
superb நன்பா
ReplyDelete