Sunday, April 17, 2011

எது ?

தண்ணீரே தீர்வேன்றறிவேன்
தகிக்கின்ற தாகத்திற்கு

எது இதன் தீர்வென்று
 எவர் அறிவார்
கொதிக்கின்ற காதலுக்கு

விழி பேனா வழி வழிந்து
உயிர் மை தீர எழுதுகிறேன்
தேடல் எனும் கடுதாசி,
நானறியா உன் முகவரிக்கு

மழைக்காய் காத்திருக்கும் பாலை நிலம் போலே
ஏமாற்றம் எனத் தெரிந்தும்
நீளுது உனைத் தேடியே என் பயணம்


2 comments:

  1. 1)தகிக்கின்ற = தவிக்கின்ற

    2)கொதிக்க்றேன்ரக்
    வல்லினம் இரட்டித்துள்ளது
    3)தீரத் எழுதுகிறேன்
    உயிர் முன் வலி மிகாது
    இவற்றில் பிழை உள்ளதால் குறைவாக மதிப்பிட்டோம்
    ----மெப்கோ தமிழ் கிறுக்கன்

    ReplyDelete
  2. மற்ற பிழைகள் ஒப்புக் கொள்ளப் படுகிறது...மன்னிக்கவும் யான் கொஞ்சம் தமிழில் தடுமாற்றம் கொண்டவன்...

    தகிக்கின்ற பொருள் கொதிக்கின்ற/ வாட்டுகின்ற ... தமிழ் அகராதியை புரட்டிப் பாருங்கள் புதைந்த தமிழ் இனிமை வெளிச்சத்திற்கு வரும் ... u gave me a very valuable comment man, then what is the need for anonymity here...any way thanx for the effort for ur comments...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்