அரியர் சுவரைத்
தாண்ட முடியா
திறமைசாளிக்கும்
அறிய சந்தர்ப்பம் தரும்
குரலாலே சிரிக்கும்
வித்தை கற்றவர்கள்
அவர்கள் உச்சரிப்பது
வெறும் ஆங்கில மொழிதான்
வேறு மந்திரம் ஏதுமில்லை
இருந்து ஏனோ இருதயம்
எளிதாய் அவர்கள் வசப்படுது
கண்கள் பார்க்காமல்
அந்த தொலைபேசிக்காரி
அழகி என்று
அளந்து காட்டும் குரல்
அவளிடம் பேச,
வேண்டுமெனவே
நன்றாய் இருந்தவைகளிலெல்லாம்
குறைகள் தெரிந்தது
எல்லோர் காதுக்குள்ளும்
குரல் அமிழ்தம் ஊற்றுபவர்கள்.
கடவுளாலும் தீராத
பிரச்சனையே ஆகினும்
நொடியில் தீர்க்கலாம்
நொடியில் தீர்க்கலாம்
என்ற நம்பிக்கை தருபவர்கள்
பிறருக்காய் குரல் கொடுக்கும்
ஜீவன் தனக்காய்
பேச வார்த்தை இன்றி
ஊமையாகிப் போனது
ஏனோ வாழ்க்கைத் தாகத்தால்
தவிக்கும்வாய்க்கும் நீர் மறந்தான்
லட்சியப் பசிக்காய்
சரியான வேளையில் பசி மறந்தான்
நாகரிகம் கெடுக்கும் கூட்டம்
என்று ஊரே இவனை வசை பாடும்
இவர்கள் நாகரிகத்தை
ஒரு சான் வயுறுக்கு
அடகு வைத்த கணக்கு
எவன் அறிவான்
சிறைக்குள் இருக்கும்
கிளியிடம் தன் தலைஎழுத்தை
வாசிக்க சொல்லும் கூட்டம்போலே
ஒருசிலரின் இடைவேளிவிடா
அழைப்புகளின் அலைகளால்
இவர்கள் வாழ்க்கை
ஓடமும் ஓடுது
அழுக்கு ஜீன்சிலும்
அபாச்சே பைக்கிலும்
திரியும் அழகன் இவன்
பீசா சாப்பிட்டும்
பிச்சைக்காரன் இவன்
வங்கிகளுக்கு
குரல்கொடுக்கும்
ஏழை இவன்
ஓயாத சென்னைகூட
உறங்கிப் போகும் நடுஜாமம்
பேய் அழுத்துப்போகும் நேரத்தில்
அலுவல் முடிந்து
வீடு திரும்பும் அப்பாவி இவன்
வீடு திரும்பும் அப்பாவி இவன்
குரல் உளியால் தன் வாழ்கையை செதுக்கும் சிற்பி இவர்கள்
ReplyDeleteஉன் வார்த்தைகளில் அவர்கள் வாழ்வை உணர்தேன் தோழா :)