அழகு
இந்த ஒற்றை வார்த்தைக்கு
அகராதியும் கற்காத
அர்த்தம் நீ...
அழகாய் உன்னை
எனக்கு கொடுத்து விட்டு
வெறும் இரண்டு கண் கொடுத்த
பிரம்மன் கஞ்சனடி
நீ எதிரே வந்தால்
உலக மொழி அத்தனையும்
நான் கற்று இருந்தாலும்
வார்த்தை பஞ்சமடி
திங்கள் ஒன்றாம் தேதி
சம்பளம் வரவானதை
சொல்லும் குறுஞ்செய்தியைவிட
உன் தவறிய அழைப்பே
அளவில்லா மகிழ்வைத் தருது
நாம் காதல்
பேசத் துவங்கியா
நாள் தொட்டு
என் கைபேசியில்
கைரேகைவிட
முத்தமிட்ட இதழ்ரேகை அதிகம்
தெய்வம்
தாய் வடிவில் மட்டுமல்ல
என்னவளே! உன் வடிவிலும் வரும்
அன்னை மடி சொர்க்கம் என்றால்
உன் மடியிலும்
தூங்க ஒரு முறை அனுமதி
நான் இரண்டாம் முறை
உயிருடன் சுவர்க்கம்
சென்று வருவேன்...
சொர்க்கம் போயிட்டு திரும்பி வந்துரு மச்சான்..
ReplyDeletelol...kandipa da
Delete